Monday, 27 May 2024

கோத்திரம் என்றால் என்ன?


கோத்திரம் என்றால் என்ன? கோயில்களில் அர்ச்சனைக்கு கேட்பதன் முக்கியத்துவம் என்ன?

கோத்திரம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளலாமா?


பொதுவாக காதல் திருமணங்களில்தான் வீடுகளில் பெரியவர்கள் குலம், கோத்திரம் தெரியாத ஒருத்தரையா கல்யாணம் செய்துக்க போறே? என கேட்பார்கள். அது போல் திருமணத்திற்கு பெண் தேடும் போதும் சிலரது பழக்கம் ஒரே கோத்திரத்தில் பெண் எடுப்பது.

What is Gothram in Tamil and Its Significance How many gothra Available in India
சிலர் வெவ்வேறு கோத்திரங்களில்தான் பெண் எடுப்பார்கள். அதிலும் அண்ணன் தம்பி கோத்திரங்களை தவிர்த்துவிடுவார்கள். உதாரணமாக விஸ்வாமித்ர கோத்திரமும் கௌசீக கோத்திரமும் அண்ணன் தம்பி கோத்திரம் என்பதால் இந்த கோத்திரகாரர்கள் பெண்ணை கொடுப்பதோ பெண்ணை எடுப்பதோ செய்யமாட்டார்கள் விஸ்வாமித்ரரும் கௌசீகரும் அண்ணன் தம்பிகள் என்பதால் திருமணம் செய்வோரும் அதே உறவு முறையில் வருவர். இப்போது அதற்கெல்லாம் விதிவிலக்குதான். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கோத்திரம் என்பது முக்கியமானது. கோயில்களுக்கு சென்றால் கூட பெயர் , நட்சத்திரம், கோத்திரம் என்பதைத்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் சிலர் கோத்திரம் சொல்வதை தவிர்த்துவிட்டு வெறும் பெயரையும் நட்சத்திரத்தையும் மட்டுமே சொல்லி அர்ச்சனை செய்து விடுகிறார்கள். சிலருக்கு கோத்திரமே தெரியாமலும் இருக்கும். எனவே கோத்திரம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து கோரா என்ற வெப்சைட்டில் துளசி என்பவர் கூறியிருப்பதாவது: வாழையடி வாழையாக தொடரும் வம்சாவளியைத்தான் கோத்திரம் என்பார்கள்.


இந்த கோத்திரம் என்ற ஒன்று ஒருவரின் உடல், உளவியல் பண்புகளை அடிப்படை மரபியலாக கொண்டது.

கோத்திரம் என்பது ஆண்வழி மரபிற்கு மட்டுமே பொருந்தும் அது பெண்களுக்கானது அல்ல.

விளக்கமாக சொல்வதாக இருந்தால். மனித மரபணு மூலம் கடத்தப்படும் வம்சாவளி என்னும் தொடர் நிகழ்வில் ஒரு ஆண் என்பவன் அவனது மரபணு பண்பில் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மட்டுமே இருக்கின்றான் எனலாம். ஆனால் ஒரு பெண் அவளது மரபியல் பண்பில் முழுவதும் பெண்ணாகவே இருக்கின்றாள் எனலாம்.

இதற்கு அடிப்படை காரணம் மரபணுவில் இருக்கும் ஆணின் 23 க்ரோமோசமும் பெண்ணின் மரபணுவில் இருக்கும் 23 க்ரோமோசமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.


இதில் ஆணிடம் y+x என்ற ஆண்+பெண் க்ரோமோசமும். பெண்ணிடம் x+x என்ற பெண் க்ரோமோசமும் உண்டு.

ஒரு வம்சத்தில் வரும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஆணின் மரபணுதான் முடிவு செய்கிறது. இதன் காரணம் ஆணிடம் மட்டுமே y என்கின்ற ஆண் குழந்தைக்கு உண்டான மரபணு உண்டு. பெண்ணிடம் ஆணுக்கு உண்டான y என்கின்ற க்ரோமோசோம் இருப்பதில்லை.

ஒரு ஆணுடைய "y"என்கின்ற க்ரோமோசமும் ஒரு பெண்ணின் x என்ற க்ரோமோசோம் சேரும் போது மட்டுமே y+x சேர்ந்து ஆண் குழந்தை பிறக்கும்.

ஒரு ஆணின் x க்ரோமோசோம் பெண்ணின் x க்ரோமோசமும் சேரும் போது மட்டுமே பெண் குழந்தைகள் பிறக்கும்.

இந் நிலையில் மரபியல் வழியில் ஆணின் மூலமே ஆணுக்கு கொடுக்கப்படும் y எனும் மரபணுதான் கோத்திரம். இது வாழையடி வாழையாக தந்தை மூலமே மகனுக்கு கடத்தி வரப்படுகிறது கால காலமாக என தெரிவித்துள்ளார்.

அது போல் இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆய்வியல் நிறைஞர் திருத்தம் பொன் சரவணன் என்பவர் கூறியிருப்பதாவது:

கோத்திரம், சாதி, குலம் ஆகியவை தமிழ்ச் சொற்களே. வழக்கம் போல இவற்றையும் சமஸ்கிருதமாகவே நினைத்து வருகின்றனர்.

சாத்து என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கூட்டம் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. தொடக்கத்தில் மக்கள் பல்வேறு குழுக்களாக அதாவது கூட்டங்களாகவே வாழ்ந்து வந்தவர்கள். ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாருடன் கொண்டுள்ள இணக்கத்தைப் பொறுத்தே வணிகம், திருமணம் போன்றவற்றுக்காக உறவு கொள்வார்கள்.

கூட்டத்தைக் குறிக்கின்ற சாத்து என்ற சொல்லில் இருந்தே சாதி என்ற சொல் பிறந்தது.

சாத்து >>> சாதி

சாதி என்பது தமிழ்ச்சொல்லே என்று இதனான் அறியலாம். இதைப்போலத் தோன்றிய இன்னொரு தமிழ்ச்சொல்லே குலம் என்பதாகும். குலவுதல் என்றால் கூடுதல், குவிதல் என்று பொருள். இதில் இருந்து தோன்றியதே குலம் என்ற சொல் ஆகும்.

குலவு >>> குலம்

குலம் என்பதும் தமிழ்ச்சொல் என்று இதனான் அறியலாம்.

கூட்டங்கள் பெருகப் பெருக, எந்தெந்த குலம் / சாதி / கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரோடு திருமண உறவு கொள்ளலாம் என்பதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டன. திருமண உறவுக்காக ஆண் / பெண்ணைக் கொள்ளும் திறம் அதாவது வகையே கோத்திரம் என்று அழைக்கப்பட்டது.

கோல் (=கொள்ளு) + திறம் (=வகை) = கோற்றிறம் >>> கோத்திரம் = கொள்ளும் வகை.

சாதி, குலம், கோத்திரம் என்ற மூன்று தமிழ்ச் சொற்களுமே பின்னாளில் தமிக்ருத மொழியாக மாற்றப்பட்டன.

சாதி >>> சா^த்

குலம் >>> குல

கோத்திரம் >>> கோ~த்ர

இவையெல்லாம் எப்போது தோன்றின என்பதற்கான எவ்வித சான்றுகளும் எந்த இனத்தாருக்கும் இதுவரை கிட்டவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. :)) என தெரிவித்துள்ளார்.

அது போல் ஹரிஹரன் என்பவர் கூறியிருப்பதாவது:

கோத்திரம் என்னும் "சமஸ்கிருத" மொழி வார்த்தையின் "தமிழாக்கமே" - கூட்டம், பங்காளி வகையறா, குலவம்சம், கிளை.

1.செங்குந்தர்கைக்கோள முதலியார், கொங்கு வேளாளர், கொங்கு நாடார், அகமுடையார், கள்ளர், பள்ளர் - போன்ற இனத்தவர் கோத்திரம் என்பதை "கூட்டம்" என்று சொல்வார்கள்.

2. நட்டாத்தி நாடார் இனத்தவர் கோத்திரம் என்பதை "இண்டி" என்று சொல்வார்கள்.

3.மறவர் இனத்தவர் கோத்திரம் என்பதை "கிளை" என்று சொல்வார்கள்.

4.நாட்டுக்கோட்டை நகரத்து செட்டியார் இனத்தவர் கோத்திரம் என்பதை "கோவில் வீடு" என்று சொல்வார்கள். (இந்த சமூகத்தை ஒன்பது கோவில்வீடு (கோத்திரம் ) உள்ளது ).

5.மற்ற சில இனத்தவர் கோத்திரம் என்பதை "பங்காளி வகையறா" என்று சொல்வார்கள். இவ்வாறு கோத்திரம் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.


2 comments:

  1. எங்க வமிசத்தில் அது கிடையவே கிடையாது என்பர். எனவே, கோத்திரம் என்பதற்கு வமிசம், குடி என்றும் கூறுவர்.

    ReplyDelete
  2. அய்யா, வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். பதிவு அருமை அய்யா.

    ReplyDelete