Monday, 17 June 2024

ஒரு எலுமிச்சம் பழம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?


 
ஒரே ஒரு எலுமிச்சம் பழம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? எதிர்மறை ஆற்றலை விரட்டும் தன்மையை கொண்ட இந்த எலுமிச்சம் பழத்தின் மகத்துவம் என்ன தெரியுமா?
தேவ கனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சம் பழமானது, தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்பார்கள்.. வேத சாஸ்திரங்களை பொறுத்தவரை, எலுமிச்சம் பழத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதப்படுகிறது.


Lemon pariharam Spirituality Pooja Room
மந்திரங்களை கிரகிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளதுடன், நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. அதனால்தான், தெய்வ வழிபாட்டில் தவிர்க்கவே முடியாத பழமாகிவிட்டது எலுமிச்சை...




திருஷ்டிப்பழம்: திருஷ்டி கழிப்பதற்காக எலுமிச்சை பழம் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.. அதேபோல, மற்றவர்களுக்கு கெடுதலை தரக்கூடிய செய்வினை செய்வதற்காகவும் இதே எலுமிச்சைதான் பயன்படுத்தப்படுகிறது. மற்றொருபக்கம், துஷ்ட சக்திகளை நம் மீது விழாமல் தனக்குள் கிரகித்துக் கொள்ளவும் செய்கிறது.



குடும்பத்தில் யாராவது அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கிடந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைய உள்ளது என்றே அர்த்தம்.. உறவுகளுக்குள் தேவையில்லாத சிக்கல்களும் எழும்.. எனவே, நேர்மறை ஆற்றலை பெருக்க எலுமிச்சம் பழங்கள் உதவுகின்றன.

தெய்வங்கள்: துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு எலுமிச்சையை மாலையாக அணிவித்தால், நீண்ட நாள் தடைபட்ட காரியங்கள் கைகூடுமாம்.. அதேபோல, எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செல்வதற்கு முன்பும், 3 எலுமிச்சம் பழங்களை அம்மன் கோவில் வாசலின் முன்புறமுள்ள திரிசூலத்தில் சொருகி விட்டு சென்றால் நல்லது...

அதுமட்டுமல்லாமல், அம்மனுக்கு எழுமிச்சம் மாலை சாற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்க தம்பதியர்கள் எலுமிச்சம் பழ மாலையை அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சாற்றலாம்.



அதேபோல, எலுமிச்சம் பழத்தில் சில முக்கிய விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.. குறிப்பாக,எலுமிச்சை பழத்தை எப்போதுமே பிறரிடமிருந்து கடனாக வாங்கக் கூடாது என்பார்கள்.. தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்தும் எலுமிச்சம்பழம் வாங்கக்கூடாது... பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலுமிச்சம்பழத்தையும் தொடக்கூடாது. எப்போதும் சடங்குக்காக வாங்கினால், காசு கொடுத்தே வாங்க வேண்டும்.

எலுமிச்சை: கோவிலில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். ஆனால் கோயிலிலிருந்து பிரசாதமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுவரும் எலுமிச்சை பழத்தை திருஷ்டி சுத்தி போட பயன்படுத்தக் கூடாது. வீட்டிலிருக்கும் எலுமிச்சை பழத்தையே திருஷ்டி சுத்த பயன்படுத்த வேண்டுமாம்.

நல்ல பழுத்த மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம்பழத்தை திருஷ்டிக்கு பயன்படுத்தலாம். இப்பழத்தினை இரண்டாக பிளந்து குங்குமம் தடவி, யாருக்கு திருஷ்டி இருக்கிறதோ, அவரை சூரியனை நோக்கி நிற்க வைத்தோ, அல்லது உட்கார வைத்தோ, 3 முறை எலுமிச்சம் பழத்தால் சுற்றி, அதை கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என 4 திசைகளிலும் விட்டெரிதலே திருஷ்டி கழித்தல் எனப்படும். இந்தப்பழம் காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ கூடாது...


அதேபோல, வீட்டில் எலுமிச்சையால் கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது.. திருஷ்டி கழித்து முடித்ததுமே, அந்த எலுமிச்சம் பழத்தை நடுரோட்டில் வீசியெறியக்கூடாது.. அப்படி யாராவது வீசியெறியும் எலுமிச்சம் பழத்தை மிதிக்காமல் கவனமாக செல்ல வேண்டும்..

கெட்ட சக்திகள்: அல்லது ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக வெட்டி, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கைகளால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி வீசி விட வேண்டும். இதனாலும், வீட்டிலுள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்குமாம்.


அதேபோல, எலுமிச்சம்பழத்தை 2 துண்டுகளாக வெட்டி குங்குமமும் மஞ்சளும் தடவி வீட்டு வாசலின் முன்புறத்தின், இரண்டு முனையிலும் வைத்துவிட்டால், கண் திருஷ்டியும், தீய சக்திகளும் விலகி செல்லும். எலுமிச்சை பழத்தில் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்னைகள் தீர்கின்றன.

4 திசைகள்: மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம்பழத்தை திருஷ்டிக்கு பயன்படுத்தலாம். இப்பழத்தினை இரண்டாக பிளந்து குங்குமம் தடவி, யாருக்கு திருஷ்டி இருக்கிறதோ, அவரை சூரியனை நோக்கி நிற்க வைத்தோ, அல்லது உட்கார வைத்தோ, 3 முறை எலுமிச்சம் பழத்தால் சுற்றி, அதை கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என 4 திசைகளிலும் விட்டெரிதலே திருஷ்டி கழித்தல் எனப்படும். இந்தப்பழம் காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ கூடாது..


எலுமிச்சம் பழம் எனும் அதிசய கனி.. எலுமிச்சை இலை தரும் நன்மை.. எலுமிச்சம்பழத்தை நிறைய யூஸ் பண்ணலாமா?
எலுமிச்சம் பழம் எனும் அதிசய கனி.. எலுமிச்சை இலை தரும் நன்மை.. எலுமிச்சம்பழத்தை நிறைய யூஸ் பண்ணலாமா?
 

 

 

 

No comments:

Post a Comment