Friday, 5 July 2024

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் படத்தை வீட்டில் வைப்பதால் ஏற்படும் பலன்கள்

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் படத்தை வீட்டில் வைப்பதால் ஏற்படும் பலன்கள்.. ! பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி என்று நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம்.. இந்த பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் விளக்கத்தை ராமாயணத்தில் காண்கிறோம். ராமர் ராவணன் போரின் போது, ​​ராவணன் பாதாள உலகத்தை ஆண்ட மஹிராவணனின் உதவியை நாடுகிறான். ஆஞ்சநேயரால் அமைக்கப்பட்ட வால சயனமந்திரத்திலிருந்து (வால் கட்டப்பட்ட) ராம லக்ஷ்மணரை விபீஷணன் வடிவில் மஹிராவணன் கடத்திச் செல்கிறான். இதையறிந்த ஆஞ்சநேயர், ஸ்ரீராம லக்ஷ்மணனைத் தேடி பாதாளத்திற்குச் செல்கிறார். நடராஜர் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது தெரியுமா? அப்போது பாதாள லோகத்தில் ஒரே நேரத்தில் ஐந்து விளக்குகளை வெவ்வேறு திசைகளில் உடைக்கிறார் ஆஞ்சநேயர். அதனால் மஹிராவணன் இறந்துவிடுவார். இதை அறிந்தவர் பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமியின் வடிவத்தை எடுக்கிறார். ஆஞ்சநேயரின் முகங்களில் ஒன்று காகா, கருடன், வராஹா, ஹயக்ரீவர் மற்றும் நரசிம்மர். ஐந்து முக அவதாரத்தை உருவாக்கி, அந்த விளக்குகளை ஒரேயடியாக அழித்து (ஆர்பி) ஸ்ரீ ராமர் லட்சுமணனைக் காப்பாற்றுகிறார். 6 July 2024 AAJ KA RASHIFAL| इन राशि वालों को मिलेगी खुशखबरी | Daily Astrology | Boldsky எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிபவன் அஞ்சனை மைந்தன் அனுமன். அனுமனை பஞ்சமுக ஆஞ்சனேயராக வழிபாடு செய்ய சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகுதல் என அனைத்து நலன்களும் உண்டாகும். நமது சமய மரபில் ஐந்து என்கிற எண் மிகவும் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் என பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. ஹனுமன் முகம், நரசிம்ம முகம்,கருட முகம், வராக முகம், ஹயக்ரீவ முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முக வடிவில் ஒருங்கிணைந்து உள்ளதே பஞ்சமுக ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார். டீனேஜ் வயதினருக்கான சில ட்ரெண்டியான ஃபேஷன் டிப்ஸ்...! பஞ்சமுக ஆஞ்சனேயர் மந்த்ராலய மகானான ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் உபாசனை தெய்வமாக திகழ்கிறார். அவர் பஞ்சமுக ஆஞ்சனேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என அழைக்கப்படுகிறது. அங்கு பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணத்திலும் பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூருக்கு அருகில் உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் சுவாமி கோயில் உள்ளது. நம் நாட்டில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு பல ஊர்களிலும் கோயில்கள் உண்டு. புதுச்சேரி அருகே பஞ்சவடி எனும் ஊரில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. ஐந்து முகங்கள் தவிர பத்து முகங்களை கொண்ட தசமுக ஆஞ்சனேயரும் உண்டு. சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும். அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். அஞ்சநேயருக்கு வடை மாலை ஏன் தெரியுமா? பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது. வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது. இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப் பறித்து சீதை மாலையாக அணிவித்தார். பஞ்சமுக ஆஞ்சநேயர் நோக்கிய திசைகளும் பலன்களும் 1. கிழக்கு திசையை நோக்கி உள்ள அனுமன் முகம் சகல கிரக தோஷங்களையும் போக்குவதுடன் மனதையும் தூய்மைப்படுத்தும். 2. தெற்கு திசையை நோக்கியுள்ள ஸ்ரீ நரசிம்மர் முகம் தீமையை போக்கும். நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தை போக்குவதுடன் நம்மை வெற்றி பெறவும் வைக்கும். 3. மேற்கு திசை நோக்கிய கருட முகம் தீய சக்திகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் தீய விளைவுகளை போக்குவதுடன், விஷக்கடியால் ஏற்படும் விஷத்தையும் முறிக்கும். பிணி தீர்க்கும் கருட முகம். 4. வடக்கு திசை நோக்கிய வராக முகம் சாந்தியும் நிம்மதியும் தருவதுடன் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும். 5. மேலோக்கி உள்ள ஹயக்ரீவ முகமானது நமக்கு கல்வியும் ஞானத்தையும் தருவதுடன் எடுத்த காரியங்களில் வெற்றியையும், புத்திர பாக்கியத்தையும் அளிக்க வல்லது. மேலும் ஹயக்ரீவஸ்வாமி அறிவையும், மகிழ்ச்சியையும், நல்ல வாழ்க்கைத் துணையையும், சந்ததியையும் அருளுகிறார். திருப்பதியில் உள்ள மலைகளும் அதன் சிறப்புகளும்..! ஆஞ்சநேயர் வழிபாடும் கிடைக்கும் பலன்களும் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வெண்ணெய் மாலைகளை அர்ப்பணம் செய்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள். ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.. "ஸ்ரீ ராமஜெய" மந்திரம் "ஸ்ரீ ராமஜெய" மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும் மேலும், "ஸ்ரீராமஜெயம்" என்ற மந்திரத்தை 108 முறை காகிதத்தில் எழுதி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்கின்றனர் 

2 comments:

  1. Sat. 6, July, 2024 at 8.12 am.

    * தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் *M.S. விசுவநாதன்.*

    * தமிழில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி
    *அழ. வள்ளியப்பா*

    * சார்பெழுத்து *மூன்று* வகைப்படும்.

    * சுட்டெழுத்துகள் *மூன்று.*

    * வினா எழுத்துக்கள் *ஆ , ஏ , ஓ , யா, எ.*

    * அகப்பொருளும், புறப்பொருளும் கலந்து பாடப்படும் இலக்கியம் *கலம்பகம்.*

    * ஆதி உலா என்றழைக்கப்படும் நூல் *திருக்கயிலாய ஞானஉலா.*

    * காலம் காட்டும் பெயர்ச்சொல் *வினையாலணையும் பெயர்.*

    * தமிழ் செம்மொழி எனும் தகுதி பெறுவதற்கு துணை நின்ற நூல்கள் *41. அவை : எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல். (8+10+18+1+1+1+1+1 =41)*

    * எழுத்தெண்ணிப் பாடும் " பா " பெறும் பெயர் *கட்டளைப்பா.*

    * சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் *பதிற்றுப்பத்து.*

    * சங்கப் பாடல்களின் எண்ணிக்கை
    *2381.*

    * இயற்கை இன்பக்கலம் எனப் போற்றப்படும் நூல் *கலித்தொகை.*

    * இரும்புக்கடலை என அழைக்கப்படும் நூல் *பதிற்றுப்பத்து.*

    * ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப் பாடல்களின் எண்ணிக்கை *102.*

    * கடலில் எழும் கதிரவன் வருணனையுடன் தொடங்கி, அருவி வருணனையுடன் முடியும் நூல் ..
    *திருமுருகாற்றுப்படை.*

    * பத்துப்பாட்டில் அளவில் பெரிய நூல் *மதுரைக்காஞ்சி. 782 அடிகள்.*

    * பத்துப்பாட்டில் அளவில் சிறிய நூல் *முல்லைப்பாட்டு. 103- அடிகள்.*

    * 99−வகை பூக்களை குறிப்பிடும் நூல் *குறிஞ்சிப்பாட்டு.*

    * தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல் *திருமந்திரம்.*

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  2. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். ஆஞ்சநேயர் பதிவு அருமை அய்யா. அடியேனுக்கு இந்த அனுபவம் உண்டு. "ஒரு மண்டலம் விரதம் இருந்த அனுபவம். எங்களது மாவட்டத்தில் சிந்துபூந்துறை என்ற ஊரில் ஆஞ்ஜநேயர் பெரிய தாக வீற்றிருக்கிறார்.

    ReplyDelete