Sunday, 14 July 2024

எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலைகளை அணியலாம்


எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலையை அணியலாம்? யார் அணியக் கூடாது தெரியுமா?
எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலைகளை அணியலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை ஃபேஷனாக அணிவது தவறு. அது போல் போலியான கருங்காலி மாலைகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் எந்த கல்லை போட்டால் யோகம் வரும். எந்த மாலையை அணிந்தால் கடன் தொல்லை விலகும் என்ற ரேஞ்சுக்கு மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். பழங்கால நடைமுறைகளை பின்பற்றுகிறோம் என்றாலும் இதிலும் ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.


spirtuality karungali

போலியான கருங்காலி மாலைகள், ருத்ராட்ச மாலைளை மக்கள் வாங்கி அணிந்து கொண்டு அவதிப்படுகிறார்கள். பொதுவாக கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி அதிகமாகவே இருக்கும். எனவே பணம், செல்வம் பெருக கருங்காலி மாலையை அணியலாம். அல்லது கருங்காலி குச்சிகளை பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

இதன் மூலம் குலத்தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த மரங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் மரம் கருங்காலி மரம்.

கருங்காலி மரம்​முருகனுக்கு உகந்த மரமாகும். அதாவது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும்.



கருங்காலி மாலை அணிவதால் குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சொத்து பிரச்சினை, சகோதரர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.


இந்த கருங்காலி மாலையை மேஷம், விருச்சிகம், மிதுன ராசிகளில் உள்ள சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணியலாம். மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிவது நன்மை தரும் என கூறப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்கருங்காலி மாலை அணிவது கூடுதல் நன்மை தரும். கருங்காலி மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மிகவும் உகந்தது.

கருங்காலி மாலையை யார் அணியலாம் என்பதை பார்த்தோம். அதை எப்படி போலியா உண்மையா என கண்டுபிடிப்பது என்பதையும் பார்ப்போம். கருங்காலி மாலையை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி, கருங்காலி மரத்தில் உள்ள சாறுகள் தண்ணீரின் மேல் எண்ணெய் படலம் போல் உருவாக வேண்டும். அப்படி ஆகாவிட்டால் அது போலி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிலர் கருங்காலி மாலையில் உள்ள ஒரு உருளையை பிளந்து காட்டுவர். அதை வைத்தும் போலியா உண்மையானதா என்பதை அணிந்து கொள்ளலாம். இந்த மாலையை அணிந்தால் மன அமைதி கிடைக்கும். கடவுளின் ஆசியும் கடைக்கண் பார்வையும் நம் மீது கிடைக்கும்.


எந்தெந்த ராசிக்காரர்கள் ரொமாண்டிக்! யார் யார் ஊர் சுற்றுவதை விரும்பமாட்டார்கள்? 
எந்தெந்த ராசிக்காரர்கள் ரொமாண்டிக்! யார் யார் ஊர் சுற்றுவதை விரும்பமாட்டார்கள்?
 

 
இந்த 3 ராசிக்காரர்களை தவிர வேறு யாரும் காலில் கருப்பு நிற கயிறை கட்டக் கூடாது தெரியுமா? 
இந்த 3 ராசிக்காரர்களை தவிர வேறு யாரும் காலில் கருப்பு நிற கயிறை கட்டக் கூடாது தெரியுமா?
 

No comments:

Post a Comment