Monday, 9 September 2024

சளி, காய்ச்சல் வரை... பலனளிக்கும் வெற்றிலை.. எப்படி பயன்படுத்துவது.?



 சளி, காய்ச்சல் வரை... பலனளிக்கும் வெற்றிலை.. எப்படி பயன்படுத்துவது.?
செக்ஸ் முதல் சளி, காய்ச்சல் வரை... பலனளிக்கும் வெற்றிலை.. எப்படி பயன்படுத்துவது.?
 கசப்பான ருசியுள்ள வெற்றிலையில் டானின்கள், புரோபேன்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைகிறது.

வெற்றிலை சிறந்த விருந்தோம்பலுக்கான முடிவுறையாக இன்றும் நடைமுறையில் உள்ளது. இப்படி உணவுக்கு பின் வெற்றிலை சாப்பிடுவது செரிமானத்தை சீராக்கும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அது நாம் சாப்பிட்ட உணவின் சுவையை நீண்ட நேரம் நாவில் வைத்திருக்கும் என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அத்தகைய வெற்றிலை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.


கசப்பான ருசியுள்ள வெற்றிலையில் டானின்கள், புரோபேன்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைகிறது.




வெற்றிலை சாறுடன் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் இது வயிற்றுப்புண் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.


உடலில் எங்காவது சிறிய வெட்டுக்காயம் இருந்தால், வெற்றிலைச் சாற்றை அங்கே தடவலாம். இது சிறந்த வலி ​​நிவாரணியாக இருக்கும். வெற்றிலைச் சாற்றால் உடலில் உள்ள உள் வலியும் குறையும்.


வெற்றிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால், பல் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.வெற்றிலை சாறு பல் துவாரங்கள், பிற பிரச்சனைகள் மற்றும் ஈறு தொற்றுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் மற்றும் ஈறு வலி வீக்கத்திற்கு வெற்றிலை சாற்றை வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.



வெற்றிலை சாறு சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த வீட்டு மருந்தாகும். வெற்றிலை பாக்கு சாறு நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.


வெற்றிலை சாறு சற்றே குமட்டல் உள்ளவர்களுக்கும் நல்லது. வெற்றிலை சாறு வாந்தி பிரச்சனையை போக்குகிறது மேலும் வெற்றிலை சாறு வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.



வெற்றிலை சாறு பாலுணர்வை அதிகரிக்கிறது. அதவாது செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாடு குறைகிறது எனில் வெற்றிலை சாப்பிட ஆசையை தூண்டுகிறது. இந்த வைத்தியம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment