Friday, 11 October 2024

மகிழ்ச்சியை அள்ளி தரும் ஈசான மூலை.. இந்த 1 பொருளை ஈசான்ய வெச்சி பாருங்க.. பணம் கொட்டும்...


மகிழ்ச்சியை அள்ளி தரும் ஈசான மூலை.. இந்த 1 பொருளை ஈசான்ய வெச்சி பாருங்க.. பணம் கொட்டும்
நம்முடைய குடும்பத்தில் வறுமை நீங்க, மகிழ்ச்சி பொங்க வேண்டுமானால், ஒரு சில விஷயங்களில் கவனத்தை செலுத்தினாலே போதும் என்கிறார்கள்.. இதுகுறித்து வாஸ்து சாஸ்திரத்தில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், ஈசான மூலை அல்லது ஈசான்ய மூலையின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.


நம்முடைய வீட்டினை பொறுத்தவரை, 4 மூலைகள் உள்ளன.. தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம்தான் தென்கிழக்கு மூலையாகும். இதற்கு அக்னி மூலை என்று பெயர்.. தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலை என்பார்கள்.. இதற்கு நைருதி மூலை அல்லது கன்னி மூலை என்று பெயர்..


spirituality vastu tips eesaani moolai

வடக்கும், மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்கு மூலையாகும். இது வாயு மூலையாகும். வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை என்று இதனை குறிப்பிடுவார்கள்... இதில், வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும். இதற்குதான் ஈசான்ய மூலை அல்லது சனி மூலை என்று சொல்வார்கள். அந்தவகைய்ல, இந்த 4 மூலைகளுமே நமக்கு முக்கியமாகும்.

மகிழ்ச்சி: இதிலுள்ள ஈசான்ய மூலை சரியாக இருந்தாலே, குடும்பத்துக்கு தேவையான மகிழ்ச்சியும், செல்வமும் சேர்ந்து கொண்டேயிருக்கும். அதனாலதான், ஈசானிய மூலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பார்கள். இந்த ஈசான்ய மூலையில்தான், பூஜை அறை அமைக்க வேண்டும்.. கடவுளுக்கான இடமே ஈசான்ய மூலை எனப்படும்.



ஒருவேளை, ஈசான்ய மூலையில் பூஜையறையை அமைக்க முடியாவிட்டால, வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறையை அமைக்கலாம். இதற்கும் சிக்கல் என்றால், வடகிழக்கு, வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜையறையை அமைக்கலாம். எனினும், மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.



ஈசான மூலை: அதேபோல, கிழக்கிலிருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வரும்படி பார்த்து கொள்ளவேண்டும்... கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்க வேண்டும்.. ஈசான்ய மூலை இருட்டாக, அடைப்பு நிறைந்து காணப்பட கூடாது. சூரிய கதிர்களை போலவே, காற்றோட்டமான வசதியும் வரும்படி பார்த்து கொள்ள வேண்டும். ஈசான்ய மூலையில் ஒரு குடத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம்.

கனமான பொருட்களை இங்கு வைக்கக் கூடாது.. அம்மிக்கல், ஆட்டுகல், பழைய பொருட்கள், பீரோ போன்றவையும் இங்கே வைக்ககூடாது.. ஈசான்ய பகுதியின் தரையின் மட்டமானது, வீட்டின் மற்ற தரை இடங்களை விட உயரத்தில் இருக்கக்கூடாது. பாத்ரூம், செப்டிக் டேங்க்குகளையும் வைக்க கூடாது. அப்படி அமைந்தால், குடும்பத்தில் நோய், மனநல பாதிப்பு, மணமுறிவு, அபார்ஷன் போன்ற சம்பவங்கள் நடந்துவிடும்.



மாடிப்படிகள்: அதனால்தான் பெரும்பாலும் மாடிப்படிகளை இங்கு அமைக்க மாட்டார்கள். ஈசான்ய மூலையில் படிப்பறை, வரவேற்பறை முதியவர்களுக்கான படுக்கையறையை அமைக்கலாம்.

பூஜை அறையில்
"பூஜை அறையில் "இந்த" பொருள் அழுகாமல் இருக்கா? நல்ல அறிகுறி.. அப்ப உங்க வீட்டில் தெய்வ சக்தி இருக்கு"
அக்னி மூலை என்பது தென்கிழக்கு மூலையாகும்.. இங்கு சமையலறை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்... பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை என்பதால், எப்போதுமே சுத்தமாக, பழுதில்லாமல் கிச்சனை அமைக்க வேண்டும்.. அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க முடியாவிட்டாலும், சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.

பணப்பெட்டி: அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, பாத்ரூம், டாய்லெட் இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு, பாத்ரூம், டாய்லெட் செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவை இருக்கக்கூடாது.. இந்த அக்னி மூலையில் கரண்ட் பொருட்களை வைக்கலாம். குடும்பத்தில் செல்வம் தங்க வேண்டுமானால, குபேர (வடக்கு)மூலை, நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டியை வைக்கலாம்.


No comments:

Post a Comment