Thursday 31 October 2024

கல்லீரல் காக்கும் கிராம்பு.. தினமும் 2 துண்டு சாப்பிட்டால் என்னாகும்?


கல்லீரல் காக்கும் கிராம்பு.. தினமும் 2 துண்டு சாப்பிட்டால் என்னாகும்? கேன்சர் டேஞ்சரும் நெருங்காது
கிராம்புகள் கல்லீரலின் காவலன் என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா? நுரையீரல் பாதுகாப்பில் கிராம்புகளின் பங்கு என்ன? வெறும் வயிற்றிலும், இரவிலும் கிராம்பு சாப்பிடுவது நன்மைகளை தருமா? இதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.


வெறும் நறுமண பொருளாகவே பார்க்கப்படும் கிராம்புகள் உண்மையிலேயே, அதிக சத்துக்களை கொண்டிருப்பவை... அஜீரணத்தை போக்கக்கூடிய தன்மை இந்த கிராம்புக்கு உள்ளதால்தான் சமையலில் பயன்படுத்துகிறோம்.



கிராம்புகள்: எனினும், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் இப்படி ஏகப்பட்ட சத்துக்களை கிராம்புகள் பெற்றிருக்கின்றன.


ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிராம்புகள், புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியவை. நுரையீரலுக்கு பாதுகாப்பாக செயல்படக்கூடியவை. அதனால்தான், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த கிராம்பு பயன்படுத்தப்படுகிறதாம்.

வெதுவெது நீர்: கிராம்பை தண்ணீரில் கொதிக்கவிட்டு தேன் கலந்து குடிக்கலாம். கிராம்பை அப்படியே வாயில் போட்டு, வெதுவெதுப்பான நீர் குடித்துவிட்டு தூங்கலாம். இரவில் தூங்க செல்லும்முன்பு 2 கிராம்புகளை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரும்போது, ஜீரணம் சீராகிறது.. மலச்சிக்கல் தீர்ந்து குடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.




பற்கள் பாதுகாப்பு: கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயிலுள்ள பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க செய்கிறது.. அதனால்தான் பற்பசைகளில் கிராம்பு அதிகமாக சேர்த்து தயாரிக்கப்படுகிறது.. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய்யும் பயன்படுத்தப்படுகிறது

அதேபோல காலையில் வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாப்பு மேம்படும். நம்முடைய உடலிருக்கும் கழிவுகள், நச்சுக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு அதிக பங்கு இருக்கிறது.. அதுமட்டுமல்ல, இந்த கிராம்பில் யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை தழைக்க செய்கிறது.



நீரிழிவு நோயாளிகள்:

 நீரிழிவு நோயாளிகளும் கிராம்பு தவிர்க்க கூடாது. காரணம், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலையை தக்கவைக்கிறது.. ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகளும் பரிந்துரை செய்கின்றன. என்றாலும் கிராம்பு எடுப்பதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment