Tuesday, 1 October 2024

நவராத்திரி பூஜையில் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்...! என்னென்ன?


நவராத்திரி பூஜையில் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்...! என்னென்ன?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது ஆக்டொபர் மாதம், ஹிந்து மக்கள் 9 நாட்கள் விரதமிருந்து நவராத்திரி பூஜை செய்வது வழக்கம். சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை மனதில் நினைத்து பூக்கள், பழங்கள் ஆகியவற்றை படைத்தது, மந்திரங்கள் சொல்லி விரதமிருந்து பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் . இந்த ஒன்பது நாள் நவராத்திரி பூஜையில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 


நவராத்திரி பூஜையில் செய்யக்கூடியவை: நவராத்திரி பூஜை 9 நாட்கள் வழிபாடு செய்யவேண்டும். இதில் முதல் மூன்று நாட்கள் பார்வதி@துர்க்கை தெய்வத்தையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தெய்வத்தையும் மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தெய்வத்தையும் வழிபாடு செய்யவேண்டும்.


நவராத்திரி பூஜை தொடங்கும் பொது நல்ல நேரத்தில் கலசம் வைத்து பூஜை செய்யவேண்டும். கலசம் வைக்கும் இடத்தை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தெளிக்கவேண்டும். கலசத்தை, பிடித்த தெய்வமாக நினைத்து அலங்காரம் செய்யவேண்டும்.

வீட்டில் கொலு வைத்து முப்பெரும் தேவிகளை மனதில் நினைத்து மந்திரங்கள் சொல்லி பூக்கள், பழங்கள் ஆகியவற்றை படைத்தது வழிபாடு செய்யவேண்டும். இவ்வாறு 9 நாட்கள் நவராத்திரி பூஜையை செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து கஷ்டங்கள் நீங்கும்.


நவராத்திரி பூஜையில் செய்யக்கூடாதவை: வீட்டில் முப்பெரும் தெய்வங்களை வைத்து பூஜை செய்யம்போது அடிக்கடி எழுந்து செல்வது பூஜைக்கான பலன்களை கொடுக்காது.

துர்க்கை, லட்சிமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு உகந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்தாமல் இருப்பது பலன்களை கொடுக்காது. மாறாக தெய்வங்களுக்கு உகந்த மஞ்சள், சிவப்பு நிற பூக்களை பயன்படுத்துவது நல்லது.

வீட்டில் பூஜை செய்யும் இடம் சுத்தமாக இல்லாமல் இருப்பது நல்லது அல்ல. எப்போதும் மஞ்சள் தெளித்து மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

பூஜை செய்யும் இந்த 9 நாட்களும் வீட்டில் சலசலப்பை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இது மன நிறைவை ஏற்படுத்தாது. பூஜை செய்தும் பலன் இல்லை என்றே அர்த்தமாகிவிடும்.

No comments:

Post a Comment