Friday, 18 October 2024

எண்ணெய் அதிகமா குடிக்காத உளுந்த வடை...



உணவு
எண்ணெய் அதிகமா குடிக்காத உளுந்த வடை: இந்த 2 பொருள் மட்டும் சேர்த்து மாவு அரைச்சுப் பாருங்க
எண்ணெய் அதிகமா குடிக்காத உளுந்து வடை செய்ய இந்த 2 பொருட்கள் மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க, எண்ணெய் அதிகமாக குடிக்காத உளுந்து வடை சாப்பிட நன்றாக இருக்கும்.
எண்ணெய் அதிகமா குடிக்காத உளுந்து வடை செய்ய இந்த 2 பொருட்கள் மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க, எண்ணெய் அதிகமாக குடிக்காத உளுந்து வடை சாப்பிட நன்றாக இருக்கும்.


பலருக்கும் உளுந்து வடை சாப்பிட பிடிக்கும், ஆனால், அதில் இருக்கும் எண்ணெய் காரணமாக உளுந்து வடையை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். அதனால், எண்ணெய் அதிகமா குடிக்காத உளுந்து வடை செய்ய இந்த 2 பொருட்கள் மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க, எண்ணெய் அதிகமாக குடிக்காத உளுந்து வடை சாப்பிட நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

நல்ல உளுந்து 450 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள்.

பச்சரிசி 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.

துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.

உளுந்து, பச்சரிசி, துவரம் பருப்பு இந்த மூன்றையும் சேர்த்து நன்றாகக் கழுவிய பிறகு 2 மணி நேரம் ஊற வையுங்கள்.

மாவு அரைக்கும்போது கெட்டியாக சிக்கிக் கொள்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி சிக்கிக் கொள்ளாமல் இருக்க இங்கே சொல்வது போல செய்யுங்கள்.

முதலில் 2 பச்சை மிளகாயை எடுத்துக் கீறி கிரைண்டரில் போட்டு அரையுங்கள், அதில் சீரகம் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டையும் ஒரு 2 நிமிடம் அரையுங்கள். இப்போது நீங்கள், ஊற வைத்த உளுந்து, பச்சரிசி, துவரம்பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரையுங்கள். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உளுந்து சேர்க்கும்போது கிரைண்டர் இறுக்கமாகும். அந்த சமயத்தில், கையில் தண்ணீர் எடுத்து தெளித்துவிட வேண்டும். 

ஒருவேளை நீங்கள் மாவு மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால், மாவு சூடாகாமல் இருக்க, ஐஸ் வாட்டர் சேர்த்து அரையுங்கள்.

இப்போது கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அரையுங்கள். மாவு நன்றாக அரைத்த பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். 

அடுத்து கொத்தமல்லி, கொஞ்சம் சீரகம், மிளகு லேசாக இடித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.  இப்போது எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடுங்கள். இப்போது மாவை ஒரு 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உளுந்து வடை நல்ல வடிவாக வரும். 

ஸ்டவ்வில் எண்ணெய் காய வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து ஒரு பாலித்தீன் கவர் எடுத்துக்கொண்டு லேசாக தண்ணீரில் ஈரமாக்கிக்கொள்ளுங்கள். அதே போல, கையை நனைத்துக் கொள்ளுங்கள். இப்போது மாவை பந்து போல எடுத்து லேசாக வட்டமாகத் தட்டி, நடுவில் ஓட்டை போட்டு அப்படியே எண்ணெயில் போட்டு, வெந்ததும் எடுக்க வேண்டும். சிலர் அனுபவம் உள்ளவர்கள் அப்படியே கைகளில் தட்டி பெரு விரலில் ஓட்டை போட்டு உளுந்து வடை செய்வார்கள். இப்போது உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் நன்றாக புசுபுசுவென சுவையாக இருக்கும்.  


No comments:

Post a Comment