Friday, 11 October 2024

எலும்பொட்டி இலை...





எலும்பு நோயை ஓட்டும் எலும்பொட்டி இலை.. நொறுங்கிய எலும்பை ஒட்டவைக்கும் ஆரோக்கியமான எலும்பு ஒட்டி இலை
வெறும் அழகுக்காக வளர்க்கப்படும் இந்த எலும்பொட்டி இலைகள், ஆயுளை கூட்டக்கூடிய அற்புத மூலிகை என்பதை பலரும் அறிவதில்லை.. எலும்பு முறிவுக்கு மருத்துவத்தில் கைகொடுத்து உதவக்கூடிய இந்த இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
கிட்டத்தட்ட முருங்கைக்கீரையை போலவே இருக்கும் இந்த செடியின் இலைகள், வேர்கள், காய்கள் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் அடங்கியவை. ஆனால், இதன் மகத்துவம் தெரியாமல், பலரும் இதை வீடுகளில் அழகுக்காக வைத்திருப்பார்கள். இந்த செடியை பார்த்தாலே விலங்குகள் எதுவும் வீடுகளுக்குள் நுழையாதாம்.


health bones
எலும்புகள்: எலும்பு சம்பந்தப்பட்ட எந்தவிதமான பிரச்சனை என்றாலும், அதை குணமாக்க இந்த எலும்பொட்டி இலையே போதும்.. முழுக்க முழுக்க கால்சியம் சத்துக்களால் நிறைந்து இந்த இலைகளுக்கு, எலும்புகளை ஒன்றிணைக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது.. இதனால், எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏலும்பொட்டி இலைகள் அருமருந்தாகின்றன.



முதுகு தண்டு, முதுகு தண்டுபடம் பாதிப்புகள் இருந்தாலும்சரி, கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கங்கள், வலிகள், ஏற்பட்டாலும்சரி, இந்த இலையை விழுதாக அரைத்து வைத்து கட்டினால், உடனடியாக தீர்வு கிடைக்கும். இதை மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
தேங்காய் எண்ணெய்: இந்த செடியை, சிறு சிறு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக சுண்டகாய்ச்சி, அதனுடைய சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்..


இறுதியில் அந்த சாற்றில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணைய்யும் கலந்து பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்த துவங்கலாம். எலும்பு முறிவு, முதுகு தண்டவடம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய்யை தடவி கட்டு போட்டால் எலும்புகள் வெகுசீக்கிரத்திலேயே சேர்ந்துவிடும். அதேபோல, தோள்பட்டைகளில் வலி, குதி கால் வலி இருந்தாலும், இந்த எண்ணெய்யை தடவலாம.

இலைச்சாறு: எண்ணெய் காய்ச்சுவது போல, இந்த இலைகளிலிருந்து சாறு எடுத்தும் பயன்படுத்தலாம்.. இதற்கு எலும்பொட்டி இலைகளை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு தண்டு காயங்கள், கிழிந்த சவ்வுகள் ஒன்றிணைந்துவிடும்..


நரம்புகளும் வலுபெறும்.. தொண்டையில் தொந்தரவு இருந்தாலும் சரியாகிவிடும். அல்லது இந்த சாற்றினை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இதனால், நெஞ்சு சளி உள்ளிட்ட சுவாச கோளாறுகள் நீங்கும். இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த எலும்பொட்டி இலையை மருந்தாக பயன்படுத்தும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும். அதுவே முறையான ஆரோக்கியமுமாகும்.


No comments:

Post a Comment