Tuesday, 29 October 2024

.ஏ.சி.யில் டன் அளவீடு என்பது என்ன?


ஏசி ரூமில் ரொம்ப நேரம் இருக்கீங்களா? AC-யை இப்படி பயன்படுத்துங்க..ஏ.சி.யில் டன் அளவீடு என்பது என்ன?
ஏசியை வீட்டில் உபயோகிக்கிறீர்களா? ஏசியிலேயே நாள் முழுவதும் இருக்கிறீர்களா? இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? ஏசி டன் அளவுகளை எப்படி தெரிந்து கொள்வது? இதுகுறித்தெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.


மழைக்காலம் துவங்கிவிட்டதால், ஏசியை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பதில் பலருக்கும் குழப்பம் வரும்.. ஆனால், குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தினால், அவை சீக்கிரத்திலேயே பழுதாகிவிடுமாம். ஏனென்றால், ஏசி மிஷினிலுள்ள கண்டென்சிங் யூனிட், குளிர்காலத்தில் பழுதாக வாய்ப்புள்ளது.

Backfill Promotion
ac air condition cooling room
மழைக்காலம்: குளிர்காலம் முடிந்த பிறகும்கூட, ஏசியில் நிரப்பியிருக்கும் வாயுவின் அளவை சரிபார்க்க வேண்டும்.. பிறகு ஏசியை சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.. மழைக்காலத்துக்கும் சேர்த்தே AC வாங்கவேண்டும்.. கூலிங் தருவதைபோலவே, ஹீட்டர்களாக பயன்படுத்திக் கொள்ளும் வசதி, இப்போதுள்ள ஏசிகளில் உள்ளன.. மழை + வெயில் இரண்டிற்குமாக, ஏசியின் வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

புதிதாக AC வாங்குவதாக இருந்தால், நல்ல திறனுள்ள, நல்ல கொள்ளளவு கொண்ட AC யாக பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால், ரூமின் அளவைவிட, ஏசி கொள்ளளவின் அளவு குறைவாக இருந்தால் ஜில் காற்று திறனும் குறைவாக இருக்கும். அந்தவகையில், ஏசியின் கொள்ளளவுகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஏசியை எப்போதுமே டன் என்ற அலகுகளை வைத்துதான், அளவீடுகளை மதிப்பிடுவார்கள்.
டன் என்பது என்ன?: டன் என்பது, AC இயங்குவதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை அளக்கும் அளவீட்டின் பெயராகும்.. ஏசியின் குளிரூட்டும் திறனை டன் மூலமே கணக்கிடப்படுகிறது. இது ரூமிலிருந்து வெளியேற்றக்கூடிய வெப்பத்தின் அளவைக் குறிக்கக் கூடியது. ஒரு மணி நேரத்தில் ஒரு எவ்வளவு வெப்பத்தை ஏசி வெளியேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே டன் கணக்கிடப்படுகிறது.


12,000 BTU 1 டன் என்று அழைக்கப்படுகிறது. BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டை குறிப்பதாகும். இது ஏசியின் குளிரூட்டும் திறனை அளவிடும் ஒரு அலகு ஆகும். 1 டன் AC என்பது 12,000 BTU ஆகும்.. 1.5 டன் AC 18,000 BTU. அதேபோல், 2 டன் AC என்பது, 24,000 BTU ஆகும். 150 அடி வரையுள்ள சிறிய அறையாக ஒரு டன் ACயே போதும்.. 200 சதுர அடி வரை உள்ள அறையாக இருந்தால் 1.5 டன் ஏசி தேவைப்படும்.. எனவே, அறையை பொறுத்துதான், ஏசியை வாங்க வேண்டுமே தவிர, விலையை பொறுத்து வாங்கக்கூடாது.


தொந்தரவுகள்: அதேபோல, ஒரு இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தினாலும் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடுமாம்.
 ஒரு நாள் முழுவதும் ஏசியில் இருந்தால் கண்கள் வறண்டு போகலாம், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். குளிர்ந்த காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியை ஏற்படுத்திவிடும். காற்று ரூமுக்குள்ளேயே சுற்றி கொண்டிருப்பதால், சுவாச பிரச்சனைகள் ஏற்படும்.

ஆஸ்துமா, சிஓபிடி(chronic obstructive pulmonary disease) மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சனைகளையும் இது அதிகரிக்க செய்துவிடும். கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்களுக்கும், தசை விறைப்பு, மூட்டு வலி தொல்லைகளை ஏற்படும். சிலருக்கு தலைவலி, குமட்டல், எற்படலாம்.

எவ்வளவு நேரம்: எனவே, ஏசியில் 2 முதல் 3 மணி நேரம் செலவழித்தாலே போதும். அதேபோல, இரவில், 2 முதல் 3 மணி நேரம் கழித்து தானாகவே AC ஆஃப் ஆகுமாறு செட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக, 22 முதல் 26 டிகிரி செல்சியஸ் லிமிட்டில் ஏசியை வைத்து பயன்படுத்த வேண்டும் என்கிறார்" 


No comments:

Post a Comment