Sunday, 13 October 2024

இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..?

இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்!
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்!
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

பரந்து விரிந்த உலகத்தில் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. பூமியின் சுற்றளவு, சூரியன், நிலவு என அனைத்தும் வியப்பிற்குள்ளானவை. இத்தகைய அபூர்வமான இயற்கையின் எல்லைகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்

பூமியின் சுற்றளவு, வானத்துக்கும் பூமிக்குமான தொலைவு, கடல் மட்டம், உயர்ந்த மலை முகடுகள் என புவிசார்ந்த பல ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானவை. அரசு தேர்வுகளில் இத்தகைய கேள்விகள்தான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன.

இந்நிலையில் அத்தகைய கேள்வி ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கும் என்பதுதான் கேள்வி. இதற்கு பலருக்கும் விடை தெரியாது.

இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம். அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில்தான் முதலில் சூரியன் உதயமாகிறது. இந்த ஊர் இந்தியாவின் ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது.

 கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சோவில் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் டோங் ஆகும். சீனாவுக்கும், மியான்மருக்கும் இடையில் இது அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இதற்கு மேலும் சிறப்பை கூட்டும்விதமாக அமைந்துள்ளது.

இந்த டோங் கிராமத்தில் நாட்டின் எந்த பகுதிகளையும் விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்துவிடும். அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும். இதற்காகவே இப்பகுதி சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment