Thursday, 31 October 2024

தீபாவளிக்கு கொல்லப்படும் ஆந்தைகள்!

 
தீபாவளிக்கு கொல்லப்படும் ஆந்தைகள்!  இந்தியாவில் தொடரும் மூடநம்பிக்கை!
இந்தியாவில் மூட நம்பிக்கை காரணமாக, ஆந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றன. குறிப்பாக தீபாவளி அன்று ஆந்தைகளை பலி கொடுப்பதன் மூலம் செல்வ செழிப்பு உண்டாகும் என்கிற நம்பிக்கை நீடித்து வருகிறது.


 தீபாவளி 5 நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த 5 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா கொண்டாடப்படும். இதில் முக்கியமாக லட்சுமி வருகை இருக்கிறது. அதாவது செல்வத்தை கொட்டும் லட்சுமி கடவுள், தீபாவளி பண்டிகையின்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் வருகிறார் என்பது நம்பிக்கை. இந்துக்களின் நம்பிக்கையின்படி, லட்சுமி ஆந்தை மீதுதான் பயணிக்கிறார். இப்படி வரும் லட்சுமியை நிரந்தரமாக வீட்டிலேயே தங்க வைத்திருக்க ஒரு விநோதமான பழக்கவழக்கம் கடைபிடிக்கப்படுகிறது


அதாவது லட்சுமி அமர்ந்து வரும் வாகனமான ஆந்தையை பலியிடுவதன் மூலம், லட்சுமியை வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்கலாம் என சிலர் நம்புகின்றனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போதும் ஆயிரக்கணக்கான ஆந்தைகள் பலியிப்பட்டு வருகின்றன. ஒரு தன்னார்வ அமைப்பின் கணக்கீட்டின்படி, சுமார் 50-60 ஆயிரம் ஆந்தைகள் வரை ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போதும் கொல்லப்படுகிறது என தெரிய வந்திருக்கிறது.


இந்த ஆந்தைகளை பிடிக்க பழங்குடியின மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு சொற்பமான பணத்தை கொடுத்து, வாங்கி அதை ரூ.50,000 வரை விற்கின்றனர். ஆந்தைகளை விற்பதற்கு என தனி கும்பலே இயங்கி வருகிறது. இந்த கும்பல் ஆந்தைகளை டோர் டெலிவரி செய்கின்றன. சமூகத்தில் பிரபலமானவர்கள் கூட மூட நம்பிக்கைகளை நம்பி ஆந்தைகளை பலி கொடுக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



இந்தியாவில் மட்டும் சுமா் 36 வகை ஆந்தை இனங்கள் இருக்கின்றன. இதில் சுமார் 15 வகை இனங்கள் வேட்டையாடப்படுகின்றன. பலியிடுவதை தவிர, ஆந்தையின் இறைச்சி, பல நோய்கை குணமாக்குவதாகவும் தவறாக நம்பப்படுகிறது. மேலும் ஆந்தையின் மண்டை ஓடு, கால் எலும்புகள் ஆகியவற்றை கொண்டு மாந்தரீகமும் செய்யப்படுகிறது. எனவே, ஆந்தைகளை வேட்டை தொழில் கொடி கட்டி பறக்கிறது. ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போதும், ஆந்தை வேட்டையை தடுக்க வனத்துறையும், காவல்துறைம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஆந்தையை வாங்குபவர்கள் இருக்கும் வரை அதன் விற்பனையும் தொடர்கிறது.


No comments:

Post a Comment