Wednesday, 2 October 2024

LDL கொழுப்பை எரித்து... மாரடைப்பை தடுக்க... உதவும் சில எளிய பழக்கங்கள்



LDL கொழுப்பை எரித்து... மாரடைப்பை தடுக்க... உதவும் சில எளிய பழக்கங்கள்
இன்றைய காலத்தில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது என்பது ஒரு பொதுவான உடல நல பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
LDL கொழுப்பை எரித்து... மாரடைப்பை தடுக்க... உதவும் சில எளிய பழக்கங்கள்

எல்டிஎல் கொலஸ்ட்ரால் மற்றும் பிற கழிவுகள் சேரும்போது இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.
இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம்.
உடல் பருமன் தான் மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது, குறிப்பாக எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் பெருமளவு அதிகரிக்கின்றன. இன்றைய காலத்தில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது என்பது ஒரு பொதுவான உடல நல பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சில எளிய பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதன் மூலம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு இரையாகாமல் தவிர்க்கலாம்.

இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இதயத் தமனிகளில் கெட்ட கொழுப்பு என்னும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் மற்றும் பிற கழிவுகள் சேரும்போது இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. இதுவே, மாரடைப்பு பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. சில விஷயங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தடுத்து உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். 


மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் ஆபத்தை தவிர்ப்பதற்கு, இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட, உணவுகளை உட்கொள்வது அவசியம். கொலஸ்ட்ராலை எரிக்கவும், பிபி அளவை கட்டுப்படுத்தவும் உதவும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதோடு, ஆரோக்கியமான மற்றும் அனைத்து சத்துக்களும் அடங்கிய சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது முக்கியம். இதற்கு நார்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை டயட்டில் சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை உள்ள உணவுகள், சிவப்பு இறைச்சி, கொழுப்பு அதிக கொண்ட உணவுகள், அளவுக்கு அதிக உப்பு போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க முடியவில்லை என்றாலும் குறைக்கவும். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல்

ஆரோக்கியமான எடையை பராமரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் உடல் பருமன் தான் மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. புரதம், நார்சத்து ஆகியவற்றுடன் குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் (Weight Loss Tips) வைத்திருக்கலாம். இதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம்.

மேலும் படிக்க | ஜிம், டயட் இல்லாமலும் ஜம்முனு எடை குறைக்க இந்த மசாலாக்கள் உதவும்: சாப்பிட்டு பாருங்க

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுதல்

தினமும் அரை மணி நேரம் உங்களால் முடிந்த மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இதற்காக நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களை தேர்வு செய்யலாம். உங்களால் முடிந்த நீட்சி பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் முக்கியம்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, மன ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது முக்கியம். மன அழுத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. யோகா அல்லது தியானத்தின் உதவியுடன், உங்கள் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம். அதோடு நல்ல தூக்கமும் அவசியம், தூக்கமின்மையிம் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.


No comments:

Post a Comment