Tuesday, 1 October 2024

vaginal bleeding


உடலுறவின்போது ரத்தப்போக்கு.. உலுக்கிய குஜராத் சம்பவம்.. பெண்களுக்கு உறவின்போது ரத்தக்கசிவு வர காரணம்?
உடலுறவுக்கு பிறகு பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுமா? அப்படி ரத்தக்கசிவு ஏற்பட என்ன காரணங்கள்? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் உரிய நேரத்தில் சிகிச்சையையும் பெற முடியும்.



vaginal bleeding vagina bleed health



உடலுறவு: உடலுறவுக்கு பிறகு ரத்தகசிவு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் ஒரு தீவிரமான பிரச்சனையாக இருக்காது.. ஆனால் இதுவே தீவிரமான ரத்தப்போக்கு இருந்தால், அதை அலட்சியப்படுத்த முடியாது.. எனவே, ரத்தப்போக்குக்கான காரணங்களை தெரிந்து கொள்வது, மிகவும் நல்லது.

முதல் முறையாக உடலுறவுக்கு பிறகு கன்னித்திரை கிழிந்து உதிரம் வெளியேறுவதும், யோனியின் உட்புற சுவர்கள் உராய்வால் கசிவு உண்டாவதும் பிரச்சனையாக இருப்பதில்லை.. மாதவிடாய் நேரங்களில், பெண்களின் உணர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளலாம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு, உடலுறவு கொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்கள் டாக்டர்கள்.

உதிரப்போக்கு: உடலுறவுக்கு பிறகு ரத்தப்போக்கு, இளவயது பெண்களைவிட, 35 வயதை தாண்டியவர்களுக்கே அதிகம் ஏற்படுகிறதாம்.. சிறுநீரில் ரத்த துளிகள் போல வெளியேறலாம்.. அதேபோல, கருத்தரிக்கும்போது, கருத்தடை மாத்திரைகள் அதிகமாக பயன்படுத்தும்போதும், ரத்தப்போக்கு வரலாம்.. தைராய்டு, கல்லீரல் உறுப்பு குறைபாடு,

சைவ உணவு நன்மைகள்.. உடலுக்கும், மனதுக்கும் ஏராளம்.. அடித்துச் சொல்லும் புதிய ஆய்வு புத்தகங்கள்
"சைவ உணவு நன்மைகள்.. உடலுக்கும், மனதுக்கும் ஏராளம்.. அடித்துச் சொல்லும் புதிய ஆய்வு புத்தகங்கள்"
ஹார்மோன் சிகிச்சை பெறும்போது அல்லது பெண் உறுப்பு அல்லது இடுப்பு பகுதியில் பெரிய காயம் ஏற்படும்போதும் உதிரப்போக்கு ஏற்படலாம். சிலசமயம், நோய்த்தொற்றின் காரணமாகவும் ரத்தப்போக்கு வரலாம்..

தொற்றுகள்: பாலியல் தொற்றுகளும் பெண்ணுறுப்பில் ரத்தம் வடிவதற்கு காரணமாகின்றன. பெண்ணுறுப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் அல்லது ஈஸ்ட் தொற்றுகள் பெண்ணுறுப்பு திசுக்களில் வீக்கம், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இதனாலும் உடலுறவின்போது ரத்தம் வருகிறது. இந்த தொற்றுகளுக்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சைகள் அவசியம் செய்ய வேண்டும்.

கருப்பை வாயில் அதிகளவிலான செல்கள் வளரும்போது, அது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக மாறுகிறது.. உடலுறவின்போதும், உடலுறவுக்கு பிறகும் ரத்தம் வருவது கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும். எனவே, 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சல்மிடியா, கோனோரா, டிரைக்கோமோனியசிஸ், ஹெர்ப்ஸ் ஆகியவை கருப்பை வாயில் கட்டி ஏற்பட காரணமாகிறது. அதற்கு செர்விக்டிஸ் என்று பெயர். உடலுறவின்போது, கருப்பை வாயில் எரிச்சல் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

புற்றுநோய்: புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும், கட்டிகள் அல்லது இயல்பற்ற உறுப்பு வளர்ச்சிகளின் காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம்என்கிறார்கள். எனவே, உடலுறவுக்கு பிறகு ரத்தக்கசிவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.. அதற்குரிய காரணங்களை அறிந்தால்தான், முறையான பரிசோதனையை செய்து கொள்ள முடியும்..!!


No comments:

Post a Comment