Thursday, 28 November 2024

வீட்டில் எத்தனை வாசல் வைக்கலாம்? 1 வீடு 3 வாசல்கள் சரியா?


வீட்டில் எத்தனை வாசல் வைக்கலாம்? 1 வீடு 3 வாசல்கள் சரியா? பணம், ஆரோக்கியம் பெருக பெஸ்ட் திசை இதுதான்
 வீடுகள் கட்டும்போது, வாசல்கள், கதவுகளை அமைக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமாம்.. அந்தவகையில், ஒரு வீட்டிற்கு எத்தனை வாசல்கள் அமைக்கலாம்? எத்தனை கதவுகள் அமைக்கலாம்? இந்த எண்ணிக்கைகளைகூட, நம்முடைய முன்னோர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீடுகளை கட்டுவதைபோலவே, வாசல்கள் அமைப்பதிலும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டுமாம்.. வாசல் எந்த இடத்தில் அமைப்பது என்பது முதல், எத்தனை வாசல் வைப்பது வரை கவனிக்க வேண்டும். காரணம், வீட்டில் வாசல் என்பது மகாலட்சுமி உள்ளே வரும் நுழைவு வாயிலாகும்..


spirituality
வாசல்கள்: எனவே, எத்தனை வாசல்கள் இருந்தாலும், தலைவாசலே அந்த வீட்டின் மதிப்பை தீர்மானிக்கிறது.. இந்த தலைவாசல் தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் வைக்கக் கூடாது.. இதனால், குடும்பத்திலுள்ளவர்கள் கடன் பிரச்சனைக்கும், ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் ஆளாவார்களாம்.. சிலசமயம் துர்மரணங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்.. ஒருவேளை அப்படி அமைந்திருந்தால், அதற்கான பரிகாரத்தை செய்துவிடலாம்.

ஒருவேளை, முழுக்க முழுக்க தெற்கு திசையில் மட்டுமே வாசல் அமைத்திருந்தால், இதனால் பாதிப்புகள் வராது.. ஆனால், சிறிதளவாவது தென்கிழக்கு அல்லது தென்மேற்கு நோக்கி வாசல் வைத்திருந்தால், பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும் என்கிறார்கள்.

3 வாசல்கள்: இப்போதெல்லாம் வீடுகளில் ஒரு வாசல் மட்டுமே உள்ளது.. பெரும்பாலும், ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம்... காற்று வீட்டிற்குள் வந்து செல்வதற்கேற்றவாறு இந்த 2 வாசல்களும் உதவும்.. இதனால், குடும்ப ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.. இப்படி 2 தலைவாசல்கள் வைக்க விரும்பினால், கிழக்கு மற்றும் தெற்கில் அமைப்பது சிறந்த பலன் தரும்.


இந்த பின்புற வாசல் கொண்ட வீட்டில் எப்போதுமே மகிழ்ச்சி தங்குமாம்.. விருந்தினர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும், பின்புற வாசலில்தான் மகிழ்ச்சியை பரப்புவார்கள்.. எப்போதுமே, அதிகபட்சமாக ஒவ்வொரு வீட்டிற்கும் 3 வாசல்கள் வரை அமைக்கலாம்.. இது எண்ணிக்கைப்படி சரியானது என்றாலும், ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதுதான் முக்கியம்.. இதனை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்களை அமைப்பது நல்லது..

மேற்கு வாசல்: எக்காரணம் கொண்டும், தெற்கு திசையில் வாசல் வைக்காமல் இருப்பதை தவிர்க்கலாம்.. அல்லது வாஸ்து முறைப்படி அமைக்கலாம்.. அல்லது அதை அடைத்துவிடலாம். அதேபோல, தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது என்பார்கள்.. 3 வாசல்களுக்கு மேல் வாசல்களை அமைத்தால், குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை ஏற்படுமாம்..


ஆனால், சில வீடுகளில் ஜன்னல்களை அமைத்திருக்க மாட்டார்கள்.. அப்படியே ஜன்னல் இருந்தாலும், ஜன்னலுக்கு பின்புறம் வேறு ஏதாவது வீடுகள், கட்டிடங்கள் இருக்கலாம்.. இதனால், வீட்டிற்குள் வெளிச்சம், காற்று வராமல், டஞ்சன் போல இருள் அடைந்து காணப்படும்.. இதுபோன்ற வீட்டிற்கு வாடகைக்கு செல்வதை தவிர்க்கலாம்.

ஜன்னல்கள்: இந்த இருள் சூழ்ந்த வீட்டிற்குள் குடியேறினால், பண பிரச்சனை, குடும்பத்தில் அமைதியின்மை, ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.. எனவே, அனைத்து வளமும், செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமானால், வாசல், ஜன்னல், கதவுகள் சரியாக அமைய வேண்டும்.

எப்போதுமே ஒரு வீட்டுக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ அமைக்கப்படும் வாசல்கள் 1, 2, 4, 6, 8.. என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டுமாம்.. அதேபோல, கட்டிடத்துக்குள் போடப்படும் அறைகளின் வாசல்களும் மேற்கூறியபடியே அமைக்கப்பட வேண்டும்.

எக்காரணம்கொண்டும், ஒரு கட்டிடத்தின் தலைவாசலை நீச்ச‌த்தில் அமைக்கக் கூடாது, வடக்கு பார்த்த கட்டிடத்துக்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது, கிழக்கு பார்த்த கட்டிடத்துக்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது. மேற்கு பார்த்த கட்டிடத்துக்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


No comments:

Post a Comment