Monday, 18 November 2024

ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. என்னென்ன தெரியுமா?


ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. என்னென்ன தெரியுமா?

பலரும் ஐஸ்கிரீம் என்ற விரும்பி உண்பார்கள். அப்படி ஐஸ் கிரீம் சாப்பிட பின் உடனடியாக இந்த உணவுகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 


காரமான உணவுகள்: ஐஸ் கிரீம் சாப்பிட உடனே காரம் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.


சிட்ரஸ் பழங்கள்: பொதுவாகவே பால் சார்ந்த பொருள்களில் சிட்ரஸ் பழங்களை சேர்க்கும்போது அவை கெட்டு போக ஆரம்பிக்கும், அப்படி இருக்கையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் இந்த பழங்களை சாப்பிடுவதால் வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

கார்போனேட்டட் பானங்கள்: ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடித்தவுடன் இந்த குளிர்பானங்களை குடிப்பதால் வயிறு ஊதி உப்பசமாக மாற ஆரம்பிக்கும்.


சூடான பானங்கள்: குளிராக இருக்க கூடிய ஐஸ் கிரீம்களை சாப்பிட்டவுடன் சூடான டீ அல்லது காபி குடித்தால் பற்கள் மற்றும் வயிறு வெப்பநிலைக்கு தயாராக இல்லாமல் தடுமாறும். இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

முழு உணவு: அனைத்து வகையான சுவைகளை கொண்ட உணவை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் குடலில் செரிமான பிரச்சனையை இவை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

ஆல்கஹால்: ஐஸ் கிரீம் சாப்பிட்ட பின் மதுபானங்களை குடித்தால் இவை எதிர்மறை வினையை ஆற்றும். இதனால் வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பொறிக்கப்பட்ட உணவுகள்: ஐஸ் கிரீம் சாப்பிட உடன் இந்த உணவுகளை எடுத்து கொள்வதால் வயிறு இந்த எண்ணெய்களால் பாதிக்கப்படும். அதனால் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment