கேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா? மீள்வது எப்படி?
கேது மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒன்றாக சேர்க்கை பெற்றுள்ளது.
இந்த சேர்க்கை நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி பார்ப்போம்.
கேது தற்போது இருக்கும் இடம் என்றால் அது தனுசு ராசியில் தான். ராசியில் கேதுவும் சனியும் ஒன்றாக சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த இரண்டு கிரகமும் பொதுவாக நன்மை செய்யாத கிரகங்களாகும்.
தற்போது அந்த கிரக அமைப்பு தனுசு ராசியில் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கிரக அமைப்பு சம்பந்தப்பட்ட ராசியினருக்கு எந்தமாதிரியான பலனைத்தரும் என்று பார்க்கலாம்.
பொதுவாக கேது சனி சேர்க்கை நன்மை செய்யாத கிரகங்கள். இரண்டு கிரகமும் ராசியில் ஒன்றாக சேர்ந்தால் என்னவாகும் என்றால்? உடல் ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படும். ஒருவேளை தசாபுத்தி நன்றாக இருந்தால் தப்பிக்கலாம்.
இல்லையெனில், ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் முதல் பெரிய பாதிப்புகள் வரை ஏற்படுத்தும். ஜெனனகால ஜாதகத்தை பொருத்து, அவரவரின் வயதை பொருத்து நடைபெறுகின்ற தசாபுத்தியை பொருத்து பலனை கொடுக்கும்.
சின்ன பாதிப்பா, பெரிய பாதிப்பா இல்லை 365 நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுமா? அல்லது சிலநாட்கள் மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகுமா? எந்த அளவுக்கு தீவிர தன்மை இருக்கும் என்பது உங்களின் ஜெனன கால ஜாதகத்தைப் பொருத்து மாறுபடும்.
நோய்களுக்கும் நவக்கிரகங்களுக்கு நிறைய தொடர்புள்ளது. அந்தவகையில், எந்த கிரகம் எந்த இடத்தில் வந்தால் எந்த நோய் ஏற்படும்? நிரந்திரமாக நீடிக்குமா? விரைவில் சரியாகுமா? இல்லை கூடவே நீடிக்குமா? என்று நோயைப் பற்றி நிறைய விஷயம் உள்ளது.
ஆனால், சனி கேது சேர்க்கை என்பது நோயை ஏற்படுத்தும் என்பது உறுதி. அவரவர் ஜெனனகால ஜாதகத்தை பொருத்து நோயின் வீரியதன்மை மாறுபடும். பெரும்பாலும், இந்த சேர்க்கையானது ஒரு சிலருக்கு தோல் வியாதியை ஏற்படுத்தும். கன்னத்தின் இரண்டு பக்கமும் கருப்பாக பேச்சஸ் வர வாய்ப்புள்ளது. இல்லையென்றால் வெள்ளையாக திட்டு போன்று உடலில் வெண்நோய் ஏற்பட்டு மறையலாம். தோலில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த கிரகஅமைப்பு.
சரி, தற்போது கிரகநிலைப்படி தனுசுக்கு 7-ல் ராகு வந்துள்ளது. இது யோகமா? தோஷமா என்றால்? ராகு எப்போதும் யோகம் தரக்கூடிய கிரகம், எனவே, எந்த இடத்தில் ராகு இருந்தாலும் அது 100 சதவீதம் நன்மையை மட்டும் தான் செய்யும்.
மேலும், 7-ல் ராகு இருந்தால் வாழ்க்கைத்துணைக்கு மிகப்பெரிய யோகத்தைத் தரும். திருமணமான ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும் யோகம் தரும். கேது தோஷம் என்றால் ராகு யோகம் என்றே கூறுவர். 7-ல் ராகு வந்தால் தம்பதியரின் இல்வாழ்க்கை நன்றாக இருக்கும், வாழ்க்கைக்கு தேவையான சுகபோகத்தை தரக்கூடியவர் இவர்தான்.
கேது-சனி சேர்க்கையில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது?
சனி, கேது என்பது கடுமையான கிரகச் சேர்க்கையாகும். எனவே, இறைவனின் திருவடியை சரணாகதி அடைவது நன்மையைத் தரும். இந்த கிரகச்சேர்க்கை தற்போது தனுசு ராசியில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கி வரலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்துவரலாம். அப்பரம் கேதுயாவது, சனியாவது எந்த கிரகமும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
பொதுவாக சனிக்கிழமையில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும். மேலும், இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் முத்துசாமி திக்ஷிதர் இயற்றிய திவாகர தனுஜம் என்ற பாடலை பாடலாம். கோளறு பதிகத்தை படித்து வரலாம்.
No comments:
Post a Comment