மாவிலை தோரணம்.. மாமரத்தின் மகத்துவம் தெரியுமா? வீட்டு வாசலில் இதை கட்டி வைத்தாலே பணம் கொட்டுமே, செம
இந்து மதத்தில் மரங்கள் மற்றும் செடிகள் மட்டுமின்றி அவைகளின் இலைகள், தண்டுகள், பழங்கள், விதைகள், வேர்கள் போன்றவையும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில், தெய்வ வழிபாடு முதல் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் மாவிலைகளின் சிறப்புகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி மிகவும் மங்களகரமான மரமாக கருதப்படுகிறது மாமரம்.. முக்கனிகளுள் ஒன்றான மாமரத்தின் இலைகள் மகத்துவம் நிறைந்தவை.. இந்த மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
spirituality maavilai thoranam mango leaves
குளியலறையில் இதை வைக்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடுமாம்.. கழிவறை டைல்ஸ் இந்த கலர் இருக்கா பாருங்க
"குளியலறையில் இதை வைக்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடுமாம்.. கழிவறை டைல்ஸ் இந்த கலர் இருக்கா பாருங்க "
பூரண கும்பம்: எனவேதான், பூஜையின்போது கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை குடிப்பது, போன்ற செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அதாவது, தேங்காய் தெய்வீக உணர்வையும், பானை அன்னை பூமியையும், தண்ணீர் உயிர் கொடுப்பதையும், மா இலைகள் வாழ்க்கையையும் குறிக்கிறதாம்.
இந்த நீரானது மருத்துவ குணம் நிரம்பியது.. மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு அதிகமாக இருக்குமாம். இந்த நீரை குடிக்கும்போது, ஆரோக்கியம் மேம்படும்... மாவிலைகளை தோரணமாக வீட்டின் வாசலில் கட்டுவதால், தோஷங்கள், இன்னல்கள் இருந்தாலும் பறந்துவிடும்.
நச்சுக்காற்றுகள்: அதேபோல, தோரணமாக இந்த இலைகளை வாயிலில் கட்டுவதற்கு காரணம், இந்த இலைகள் காற்றினை சுத்தம் செய்யக்கூடியது. இதனால், நச்சுக்காற்றுகள் வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டுவிடும். வீட்டிலுள்ளவர்கள் இயற்கையான, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதுமட்டுமல்ல, இந்த மாவிலைகள் மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்.. மனிதர்களின் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, சுற்றுச்சூழலையே சுத்தமாக்குகிறது.
விளக்கு திரியின் திசை.. கார்த்திகை தீப முகங்களும், பலன்களும் என்ன? தீபத்திருநாளில் இதை மறக்காதீங்க
"விளக்கு திரியின் திசை.. கார்த்திகை தீப முகங்களும், பலன்களும் என்ன? தீபத்திருநாளில் இதை மறக்காதீங்க"
வாசலில் இதனை தோரணமாக மாட்டி வைக்கும்போது, கண்திருஷ்டியும் நீங்கிவிடும். எந்தவொரு விழாக்களிலும் இந்த மாலைகளை கட்டி வைப்பதற்கு இன்னொரு காரணம், அங்கு நிலவும் எத்தகைய எதிர்மறை எண்ணங்களையும் நீக்கிவிடும் இந்த மாவிலைகள். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை. காய்ந்த மாவிலைகளே என்றாலும் அதன் முக்கியத்துவமும், மகத்துவமும் குறைவதில்லை.
வறுமை நீங்கும்: மாமரத்தின் 11 இலைகளை வளர்பிறையில், அதுவும் சனிக்கிழமைகளில் கட்டி வைப்பது பலன்தரும்.. எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் இலைகளை கட்டிவிடக்கூடாது.அதேபோல, வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மாமர இலைகளை தண்ணீரில் நனைத்து வீடு முழுவதும் தெளிக்க தெளித்து வந்தால், வீட்டின் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
வீட்டின் பூஜையறையிலும் மாவிளக்குகளால் அலங்கரித்து, விநாயகர் சிலைக்கு அருகில் மா இலைகளை செலுத்தி வந்தால், வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது. அதேபோல, ஹனுமன் கோவிலில் தினமும் ஒரு மா இலையை சந்தனத்தால் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதி அர்ச்சனை செய்து வந்தால், அனுமனின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறலாம். அந்தவகையில், மா இலையின் மங்கள சக்தி, சுப காரியங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் என்பது நம்பிக்கையாகும்.
சன்னதியில் கட்டும் கட்டி.. இனி பம்பையிலேயே ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டலாம்! அதுவும் கம்மி செலவில்!
"சன்னதியில் கட்டும் கட்டி.. இனி பம்பையிலேயே ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டலாம்! அதுவும் கம்மி செலவில்! "
மாமரத்தின் நிழல்: எனவே, மா இலைகள், துரதிர்ஷ்டத்தை போக்கி அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. அதிலும், வீட்டின் தென் மேற்கு திசையில் மாமரத்தை வளர்ப்பது செல்வ செழிப்பை கொண்டு வருமாம்.. எனினும், வீட்டின் அருகே உயரமான மாமரங்களை வளர்க்ககூடாது என்றும், வீட்டின் மீது மாமரத்தின் நிழல் விழக்கூடாது என்றும் சொல்வார்கள்.
மாமரத்தின் 11 இலைகளை வளர்பிறையில் சனிக்கிழமையில் கட்டினால், அடுத்த சனிக்கிழமை கழட்டிவிட வேண்டுமாம்.. காய்ந்தாலும் இதன் மகத்துவம் குறைவதில்லை என்றாலும், வாரம் ஒருமுறை மாற்றுவது, கூடுதல் பலனை தரும் என்கிறார்கள். அதேபோல, 5 முதல் 6 மீட்டர் உயரமான மாங்காய் மரங்கள் வீட்டின் அருகே வளர்க்க கூடாது. வீட்டின் அருகில் மாங்காய் மரம் இருந்தால் குடும்பத்தினர் இடையே கூச்சலும், குழப்பமும் நிலவும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment