Tuesday, 5 November 2024

ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீர்..


ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீர்.. புற்றுநோய் செல்களையும் நெருங்க விடாது.. அடேங்கப்பா சூப்பர் வெண்டை
புற்றுநோய் செல்களையும் விரட்டக்கூடிய தன்மை வெண்டைக்காய்க்கு உண்டு என்கிறார்கள்.. முக்கியமாக குடல் புற்றுநோயின் அபாயத்தை தணிக்கும் வெண்டைக்காயை பற்றி பாருங்க. 10 நாளில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


வெண்டைக்காய்கள் சாப்பிடுவதால், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், வைட்டமின் A, E, K, சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெறும் 100 கிராம் வெண்டைக்காயில், 35 கிலோ கலோரி இருக்கிறதாம்.
ladys finger water lady finger
புரதம் சத்துக்கள்: வெண்டைக்காயை, இரவில் நீரில் ஊற வைத்துவிட்டு வெறும் வயிற்றில் குடிக்கலாம். இந்த நீரில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த நீரை குடித்து வரும்போது, உடல் எடை குறைகிறது. வெண்டைக்காய் மாங்கனீசின் சிறந்த மூலமாக உள்ளதால், ஊளைச்சதையை குறைக்க உதவுகிறது.

நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அடங்கியிருப்பதால், திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியிக்குகிறது.. உடலின் உஷ்ணத்தை தணிக்கிறது.. உடலிலுள்ள கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைந்துவிடும். எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுக்கப்படும். தோல் சருமம் ஆரோக்கியமாகும். நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.. கொலஸ்ட்ரால் அளவும் குறைய துவங்கும்.. இதனால் இருதய பாதுகாப்பு மேம்படும்.

பார்வை குறைபாடுகள்: வெண்டைக்காயில் பாலிபினால்கள், குவெர்செடின். ப்ளோவனாய்டுகள் அடங்கியிருப்பதால், உயர் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறதாம். குளிர்ச்சி தரக்கூடிய வெண்டைக்காய் தண்ணீர் வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற்றுகிறது.. வெண்டைக்காய் தண்ணீரை குடித்து வருபவர்களுக்கு பார்வைக்குறைபாடுகள் வருவதில்லை..


இந்த தண்ணீரிலுள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தையே போக்குகிறதாம்.. கால்சியம் நிறைந்திருப்பதால், பற்கள், எலும்புகள் வலு பெறுகின்றன.. வைட்டமின் C உள்ளதால், எலும்புகள் மட்டுமல்லாமல், பற்களுக்கும் சேர்த்தே பலம் தருகிறது. சுவாச கோளாறுகளை சரி செய்யக்கூடிய தன்மை இந்த வெண்டைக்காய் தண்ணீருக்கு உள்ளது.. ஆஸ்துமா நோயாளிகளும் இந்த தண்ணீரை குடிக்கலாம்...

அதேபோல, முற்றிய வெண்டைக்காய்களை சூப் போல செய்து குடித்தாலும், சளி, இருமல் குணமாகும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது..

நோய் எதிர்ப்பு மண்டலம்: வெண்டைக்காய் நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் C அபாரமாக உள்ளதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க செய்கிறது.. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லலாம்.


அதேபோல, பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரைச் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.. வெண்டைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும்.. மிகச்சிறந்த நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இதனால் குடல் ஆலோக்கியம் காக்கப்படுகிறது.


No comments:

Post a Comment