Monday, 25 November 2024

மூதேவி என்பவள் யார் தெரியுமா? ஸ்ரீதேவியை போலவே மூதேவியையும் வணங்கலாமா?


மூதேவியை வணங்கலாமா? வீட்டின் கஷ்டங்களை விரட்டியடிக்கும் மூத்தோள்.. விவசாயத்தின் காவல் தெய்வம் மூதேவி
மூதேவி என்பவள் யார் தெரியுமா? ஸ்ரீதேவியை போலவே மூதேவியையும் வணங்கலாமா? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? மூதேவி குறித்து புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை யாவை? என்பதையெல்லாம் சுருக்கமாக இங்கே நாம் காணலாம்.


ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியை மூதேவி என்று அழைக்கிறார்கள்.. அதாவது, மஹாலஷ்மியின் மூத்த சகோதரியே மூதேவி ஆவார்.. தீமை என்றால் என்ன? என்பதை எடுத்துக்காட்டி உயிரினங்களை நல்வழிப்படுத்துவதற்காக விஷ்ணுவினால் தோற்றம் தரப்பட்டவளே இந்த மூதேவி... எனவே, மகாலட்சுமியை போலவே வணங்க வேண்டியவர் ஆவார்.


spirituality moodevi moodevi worship

மணி பிளாண்ட் மகத்துவம்.. வீட்டில் அதிர்ஷ்டத்தை தரும் வாஸ்து செடி.. மணி பிளான்ட்டை பரிசாக தரலாமா? ஓஹோ
"மணி பிளாண்ட் மகத்துவம்.. வீட்டில் அதிர்ஷ்டத்தை தரும் வாஸ்து செடி.. மணி பிளான்ட்டை பரிசாக தரலாமா? ஓஹோ"

மூதேவி குறித்து புராணங்களிலும் கதைகள் உண்டு. ஒருமுறை சகோதரிகளான ஸ்ரீதேவி, மூதேவிக்கும், தங்களில் யார் அழகு? என்பதில் சண்டை வந்துவிட்டதாம். இதற்கு விடை கேட்டு இருவரும் நாரதரிடம் சென்றார்கள்.

11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்த குடும்பம்! நடந்தது என்ன?
யார் அழகு: ஆனால், நாரதருக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லையாம்.. லட்சுமி தான் அழகு என்றால், மூத்த தேவிக்கு கோபம் வந்து தன்னுடைய வீட்டிலேயே தங்கி விடுவாளோ அல்லது மூத்த தேவி தான் அழகு என்றால், லட்சுமி கோபித்து கொண்டு தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி விடுவாளோ என்று பயந்தார். அதனால் சிறிது நேரம் யோசித்தவாறே நின்றவர், சகோதரிகள் இருவரையும் முன்னும் பின்னுமாக நடந்து காட்ட சொன்னாராம்.

உடனே ஸ்ரீதேவியும் , மூதேவியும் முன்னும் பின்னும் நடந்துள்ளனர்.. அபபோது நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு.. மூத்த தேவி போகும்போது அழகு" என்றாராம்.. ஆனால், மூதேவி வீட்டை விட்டு வெளியேறுவதே நன்மை என்று பலரும் இதற்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டுள்ளார்களாம்.துஷ்டத்தின் சக்தியாக நினைத்துக் கொண்டு, இவரது பெயரை உச்சரிக்கவே கூடாது என்றெல்லாம் முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

மூத்தோள்: உண்மையிலேயே ஸ்ரீதேவியை போலவே, மூதேவியும் போற்றப்பட வேண்டியவர்.. நம்முடைய கஷ்டங்களை, கெடுதலை நம்மிடமிருந்து வெளியே விரட்டி அடிப்பவள்தான் மூதேவி..

தாலி கயிறு.. கல்யாணத்தில் 9 இழைகள் அணிவிப்பது ஏன்? தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஆச்சரியம்
"தாலி கயிறு.. கல்யாணத்தில் 9 இழைகள் அணிவிப்பது ஏன்? தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஆச்சரியம்"

மூதேவிக்கு ஜேஷ்டா தேவி என்று மற்றொரு பெயர் உண்டு.. ஜேஷ்டா என்றால், முதல் என்று அர்த்தம்.. மூத்தோள் என்றும் சொல்வார்கள். இந்த ஜேஷ்டா தேவியை மனதார பிரார்த்தனை செய்து வழிபட்டால், மனதில் குழப்பம் நீங்கி நிம்மதி கிடைக்கும்.. நிம்மதியான தூக்கத்துக்கும் வழிவகுக்கும்.. வறுமை நீங்கி செல்வம் தங்குமாம்.

அதேபோல, நெற்கதிர்கள் ஸ்ரீதேவி என்றும் நெற்கதிர்கள் விளைவதற்கு கருப்பு நிறத்தில் உரமாக இருக்கக் கூடியதை மூதேவி என்றும் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது அழுக்கு படிந்த கருப்பான உரத்தை மூதேவிக்கு இணையாக சொன்னதால், மூதேவி அழுக்கு படிந்த சுத்தம் இல்லாத ஒரு தெய்வம் என்று மக்களின் மனதில் பதிந்துவிட்டதாம். ஆனால், மூதேவி விளைச்சலுக்கு அதிபதியாவார்.. விவசாயத்தின் காவல் தெய்வமும்கூட.. இதனால், மூதேவிக்கென்றே சில கோயில்களும் உண்டு.

வழிபாடுகள்: குறிப்பாக, பல்லவர் காலத்தின் துவக்கத்திலிருந்தே, ஜேஷ்டா தேவி வழிபாடுகள் இருந்திருக்கின்றன. சோழர் காலத்துக்கு பிறகு, ஜேஷ்டா தேவி வழிபாடு மெல்ல குறைந்தாலும், தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பல்லவர் கால மற்றும் சோழர் கால சிவன் கோயில்களில் இன்றும் ஜேஷ்டா தேவி வழிபாடு உள்ளதாம்.. தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ அரசர்களும் இந்த மூத்த தேவிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தது சில கல்வெட்டு குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்!!!


No comments:

Post a Comment