Friday, 29 November 2024

ஒரு ஸ்பூன் பாதம் பிசின்; இவ்வளவு நன்மை இருக்கு!

 ஒரு ஸ்பூன் பாதம் பிசின்; இவ்வளவு நன்மை இருக்கு!
பாதம் பிசின் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏற்படும் பல நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். இதன் மூலம் சருமப் பிரச்சனைகள், முடி உதிர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க முடியும்.
 

Badam pisin

பாதாம் பிசின் என்பதை பெரும்பாலும் குளிர்பானங்களில் கலந்து கொடுக்கும் போது நாம் பார்த்திருப்போம். ஆனால், அவை வெறும் சுவை ஊட்டிகள் என்பதையும் கடந்து, பல மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. 

பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் பொலிவான முக அமைப்பு பெற முடியும். மேலும், பாதாம் பிசினை தினசரி சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு சீராக இருக்கவும் பாதாம் பிசின் உதவி செய்கிறது.

பாதாம் பிசின் நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இயற்கை லாக்சேட்டிவாக செயல்பட்டு பெரும்பாலான நபர்கள் கோடைகாலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. அது மட்டுமல்லாமல் அசிடிட்டி மற்றும் வயிற்றில் அல்சர் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பிசின் நமது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை அளிக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால் உடல் எடையை பராமரிக்க இது சிறந்ததாக அமைகிறது. அதே நேரத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களித்து, ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. 

லெமனேடு, ரோஸ் மில்க் அல்லது பிற புத்துணர்ச்சியூட்டும் பானங்களோடு சேர்த்து பாதாம் பிசினை சாப்பிடலாம். மேலும் மில்க் ஷேக், ஃபலூடா அல்லது தயிர் போன்ற இனிப்பு வகைகளோடு ஊற வைத்த பாதம் பிசினை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு ஃப்ரூட் சாலட் பிடிக்கும் என்றால் அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்த்து சாப்பிடுவது அதன் குளிரூட்டும் விளைவையும் அதிகரிக்கும்.

 


No comments:

Post a Comment