உடல்நலம் மாரடைப்பு வரப்போகிறது என்றால் 1 மாதத்திற்கு முன்பே கண்ணில் இந்த அறிகுறிகள் தெரியுமாம்.. உஷார்.. தற்போது ஒவ்வொரு நாளும் மாரடைப்பால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு, சிலர் அந்த மாரடைப்பால் இறந்தும் வருகிறார்கள். எனவே இன்றைய காலகட்டத்தில் இதய ஆரோக்கியத்தில் ஒருவர் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொள்வது மட்டுமின்றி, இதய பிரச்சனைகளின் அறிகுறிகளை அறிந்து, அவற்றை அனுபவித்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஒருசில அறிகுறிகளை பெரும்பாலான மக்கள் சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகளை புரோட்ரோமல் அறிகுறிகள் என்று அழைப்பர். இந்த அறிகுறிகளை ஒருவர் தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம், மாரடைப்பால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக மாரடைப்பின் போது நெஞ்சு பகுதியில் விவரிக்க முடியாத வலி ஏற்படும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் இந்த அறிகுறியைத் தவிர வேறுசில அறிகுறிகளையும் நிறைய மக்கள் அனுபவித்துள்ளனர். அந்த அறிகுறிகளாவன: * நெஞ்சு பாரம்
* படபடப்பு * சுவாசிப்பதில் சிரமம் * நெஞ்சு எரிச்சல் * உடல் சோர்வு மற்றும் பலவீனம் * தூங்குவதில் பிரச்சனை மற்றும் தூக்கமின்மை மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் பகுதியளவு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டால், ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் இரத்தக்குழாய்களில் முழு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுமானால், அதன் எச்சரிக்கை அறிகுறிகள் ஒரு மாதம் அல்லது அதற்கும் முன்பிருந்தே தெரியக்கூடும். அதுவும் ஒருவருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருந்தால், அதன் எச்சரிக்கை அறிகுறிகள் கண்களில் தெரியும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. கண்களில் மஞ்சள் நிற திட்டுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்து, ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்றால் அதன் முதன் அறிகுறி கண்களில் மஞ்சள் நிற திட்டுகள் உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் கண்களில் திடீரென்று மஞ்சள் நிற திட்டுகள் தெரியத் தொடங்கினால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். "எகண்கள் சிவந்து போவது சில நேரங்களில் கண்கள் சிவந்து காணப்படும். அப்போது நாம் அதை மிகுந்த உடல் சோர்வு அல்லது தூக்கமின்மையால் ஏற்பட்டதாக நினைத்து சாதாரணமாக விட்டுவிடுவோம். ஆனால் ஒருவரது இரத்த அழுத்தம் அதிகமானாலும் கண்கள் சிவக்கக்கூடும். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் ஒருவரது கண்கள் சிவந்து காணப்பட்டால், அவரது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும். கண் வீக்கம் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் காரணமின்றி திடீரென்று கண்களில் வீக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி இதயத்தை சோதனை செய்து பாருங்கள். கண்களில் வலி கண்களில் விவரிக்க முடியாத வலியை அனுபவித்தால், அது தீவிரமான இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்றால் இப்படியான கண் வலியை ஒருவர் அனுபவிக்கக்கூடும். இதற்கு இதயத்தில் உள்ள பிரச்சனையால் ஏற்படும் இரத்த ஓட்ட குறைபாடு தான் காரணம். தீவிரமான தலைவலி உங்களுக்கு சமீப காலமாக அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியானால் அது இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே தலைவலியை அதிகம் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை உடனே அணுகுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இந்த அறிகுறிகள் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.
No comments:
Post a Comment