கன்னி
கன்னிராசியின் கன்னி (உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.
உடல் அமைப்பு,
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,
குண அமைப்பு
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.
மணவாழ்க்கை
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.
பொருளாதார நிலை,
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
புத்திர பாக்கியம்,
பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.
தொழில்
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.
உணவு வகைகள்,
கன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 4,5,6,7,8
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன்,
No comments:
Post a Comment