Tuesday, 3 December 2024

நெய்யும் பூண்டும் சேரும் போது... என்ன ஆகும் தெரியுமா?


நெய்யும் பூண்டும் சேரும் போது... என்ன ஆகும் தெரியுமா?
Garlic roasted in ghee

Garlic roasted in ghee


தமிழ் பாரம்பரிய வைத்திய உணவு முறையில் நெய்யில் வறுத்த பூண்டை சாதத்தில் கலந்து சாப்பிடுவதும் ஒன்றாகும். பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். வாணலியில் ஒரு தேக்கரண்டி பசு நெய்யை இட்டு, அது உருகியவுடன், அதில் சில பூண்டு பற்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பின்போ நெய்யில் வறுத்த 2 பூண்டு பற்களை சாப்பிடலாம். தினமும் இப்படி ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும்.

உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு உணவில் ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும். நெய்யில் வறுத்த பூண்டு ஆரோக்கிய நன்மைகளை தரும். பச்சை பூண்டு அதிக பலன் தரும் என்றாலும் அது விரைவில் வயிற்றையும் இரைப்பையையும் புண்ணாக்கி விடும். நெய்யில் வறுத்த பூண்டு இரைப்பை, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பூண்டில் அலிசின், கால்சியம், தாமிரம் உள்ளன. நெய்யில் வைட்டமின்கள் ஏ, கே, ஈ, டி, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது தவிர, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன.

நெய்யும் பூண்டும் சேரும் போது நெய்யில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது.

நெய்யில் பூண்டை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.நெய்யில் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் தீரும்; வயிறு ஆரோக்கியமாக இருக்கும். இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையை நீக்குகிறது. 

2. பூண்டு மற்றும் நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சளி, இருமலை குணமாக்குவதோடு இது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

3. பூண்டின் இயல்பே உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை நீக்குவது தான். தன் வேலையை அது சிறப்பாக செய்யும். இதனால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். தினமும் நெய்யில் வறுத்த பூண்டை சாப்பிட்டு வந்தால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். உடல் எடையையும் கட்டுக்குள் இருக்கும்.

Garlic roasted in ghee
4. பொதுவாகவே இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

5. நெய்யில் வறுத்த பூண்டு ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை தினமும் சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது.   

6. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நெய்யில் வறுத்த பூண்டு மிகவும் நல்லது. இது நல்ல உறக்கத்தை வரவழைக்கும் .


No comments:

Post a Comment