Thursday, 26 December 2024

காதல் திருமணம் யாருக்கு?


காதல் திருமணம் யாருக்கு?

சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதியுடன் கேது சேர்ந்திருந்தால் காதல் திருமணம்தான். 

இந்த அமைப்பை உடையவர்கள் தங்களின் காதல் விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். இவர்களின் திருமணமும் ரகசியமான திருமணமாகவே பெரும்பாலும் அமைந்து விடும். 

லக்னாதிபதியும், ஏழாம் இடத்து அதிபதியும் பார்த்தாலோ, சேர்ந்தாலோ பரிவர்த்தனை பெற்றாலோ காதல் திருமணம்தான்.

 ஒன்பதாம் பாவம், ஒன்பதாம் அதிபதி பாபகர்த்தாரி யோகம் பெறுவது (அதாவது இருபுறமும் சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது) கேது ஏழில் இருப்பது போன்ற கிரக அமைப்பில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம் கலப்பு திருமணமாக அமையும்.


No comments:

Post a Comment