Monday, 2 December 2024

சந்திரன் தன்மை


சந்திரன் தன்மை

சுகங்கள், துக்கங்கள் 2. கோபங்கள், தாபங்கள் 3. உடன்பாடுகள் 4. முரண்பாடுகள் 5. ஒட்டுதல்கள் 6. விரிசல்கள் 7. பிடிவாதங்கள் 8. விட்டுக்கொடுத்தல்கள் 9. சுயநலங்கள் 10. தியாகங்கள் 11. எதிர்பார்ப்புக்கள் 12. ஏமாற்றங்கள் 13. நம்பிக்கைகள் 14. துரோகங்கள் 15. காதல் 16. காமம் 17. மன நெகிழ்ச்சிகள் 18. மன எரிச்சல்கள் 19. புளங்காகிதங்கள் 20. பூசல்கள் சந்திரன் மனதிற்குக் காரகன். ஜாதகத்தில் அவன் வலிமையாக இருந்தால் மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகன் அதிகமாகச் சந்திப்பான். இல்லையென்றால் இல்லை! மனப் போராட்டம்தான்!

சந்திரனின் ஆதிபத்யங்கள் சொந்த வீடு: கடகம் (1) நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.(3) சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம் (6) உச்சவீடு: ரிஷபம் (1) நீசவீடு: விருச்சிகம் (1) பகைவீடு: எதுவுமில்லை! (அப்பாடா பிழைத்தோம்) அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும்? ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும் அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்துப் போகிறான். அனுசரித்துப் போனால் பகை ஏது? சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை இருக்கும். சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம் அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது அலசுவோம் சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு. சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது. நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான். இந்த அளவுகளையெல்லாம் நான் எலக்ட்ரானிக் ஸ்கேல் வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். மனதில் கொள்க!

நவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து. தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி (நெல்) எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2 ஆகும்! சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும்! அதிதேவதை: பார்வதி (பராசக்தி)

Moon is the presiding deity of the element water, and rules over the tides of the sea. The sphere of the Moon is the reservoir of rainwater and thus Moon is the ruler of plants and the vegetable 
kingdom. Moon represents the mother or female
principle, the energy that creates and preserves. Moon rules peace of mind, comfort, general well-being, and also the fortune of a person. Some will be tender-hearted, wise, and learned.

Water Content of the Human Body: The average person is about 70% water by weight! சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அனைக்கட்டுகள் போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் அவன்தான் அதிபதி. பெளர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின் (Magnetic rays from the moon) அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மனநோயாளிகள் அன்று உத்வேகமாக இருப்பார்கள். சாதாரண மனிதர்கள் அதை உணர்வதில்லை. பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். The Moon gives illumination, sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune. It makes us moody, emotional, and sensitive. வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன் நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள் கிடைக்காது. இது பொது விதி அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்? ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள் இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து 181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும் சந்திரன் தேய்பிறைச் சந்திரன் அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை) நாட்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும், அந்த ஜாதகனுக்கு வெற்றிகள் அரிதாகிவிடும். வசதியான வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு ஆளாகி நொடித்துப் போவிடுவார்கள்

சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளை வைத்துப் பலன்கள்:
அமைப்புள்ள ஜாதகன் வாழ்க்கை ஓட்டத்தில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.

5. சிம்மராசியில் சந்திரன் இருந்தால்: இது சூரியனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், இயற்கையாகவே தலைமை ஏற்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.ஜாதகனுக்குத் தன்னுடைய குறிக்கோள்களை அடையக்கூடிய புத்தியும், மன உறுதியும் இருக்கும். தனித்தன்மையோடு தன் முடிவுகளை எடுக்கக் கூடியவன். மற்றவர்களுடைய யோசனைகளும் கருத்துக்களும் அவனிடம் எடுபடாது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். சட்டென்று யாராவது கோபத்தைத் தூண்டும்படி நடந்தால் கோபத்துக்கு ஆளாகி விடுவான். சீக்கிரமே சமாதானமாகியும் விடுவான். மனதில் எதையும் வஞ்சகமாக வைத்துக் கொள்ள மாட்டான்.

6. கன்னிராசியில் சந்திரன் இருந்தால்: இது புதனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் தகவல் தொழில் நுட்பம், தொலைபேசி, மற்றும் பத்திரிக்கைத் துறைகளோடு சம்பந்தப் பட்டால் சிறப்பாகப் பணியாற்றுவான். மற்றவர்கள் வசதியாக வாழ ஜாதகன் உதவும் மனப்பான்மை கொண்டவனாக இருப்பான். பல வழிகளில் பலருக்கும் உதவியாக இருப்பான். அதீத பாசமும், நேசமும் கொண்டவனாக இருப்பான். புத்திசாலியாக இருப்பான். துறு துறுவென்ற மனதைக் கொண்டவனாக இருப்பான் வியாபாரத்தில் ஈடுபட்டால், அதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல் படுவான். அழகையும், கலைகளையும் நேசிப்பவனாக, அவற்றில் ஈடுபாடு கொண்டவனாக ஜாதகன் இருப்பான்
7. துலா ராசியில் சந்திரன் இருந்தால்: இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன் அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன் காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்பான். தொழிலில் நேர்மையானவனாக இருப்பான். வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பான். விவேகம் உடையவனாக இருப்பான். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அல்லது எதைப்பேச வேண்டும் என்கின்ற ஞானம் உடையவனாக இருப்பான். சிலர் உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சம அளவில் ஈடுபாடு உடையவர்களாக விளங்குவார்கள்

8. **************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு. இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே இந்த இடம்தான் சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம். இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எப்போதும் அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால்

No comments:

Post a Comment