கேமதுருமா யோகம்! இது ஒரு அவயோகம்! ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்! I
பலன் என்ன? சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும் இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம் பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.
இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில் தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட நேரிடும் உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும
குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் இந்த
அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லலாம். மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்!
திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra) அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்!
ஓம் திரிபுரசுந்தரி போற்றி! ஓம் திரிபுரசுந்தரி போற்றி!
இதே மந்திரம் வடமொழியில்: க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ
No comments:
Post a Comment