சம்பந்தப்பட்ட ஜாதகர் எந்த தசா புக்தியில் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். 6ஆம் அதிபதியின் தசையில் அந்த நிலை ஏற்பட்டதா? அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா? என்பதைப் பொறுத்து பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் மேற்கொள்ள விரும்புபவர்கள், குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு, ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி, பிண்டங்களை அளித்தால் பலன் பெறலாம்.
ஆனால் அடுத்தடுத்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை செய்து கொள்ளலாம் என பொருள் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவங்களுக்கு உண்டான பலனை அனுபவித்தாக நேரிடும்.
No comments:
Post a Comment