Monday, 20 January 2025

ஒரு நாயகமாய் ஓட

ஒரு நாயகமாய் ஓட வுலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ –4-1-1

1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தலைப்பு : "ஒரு நாயகம்" திருவாய்மொழி சிறப்பு அய்யா. இதற்கு அடியேன் பொருள் கூறுகிறேன். அரசர் ஒருவர் ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகம் முழுவதையும் ஒருசேர ஆண்டு வருகிறார். போரில் தோற்று அரசை இழக்க நேரிட்டால் உயிர் வாழப் பிச்சை எடுக்க வேண்டி இருக்க... அப்பொழுது இரவில் பிச்சை எடுக்கையில், பானையுடன் செல்லும்போது கருத்த நாய் கவ்வும்; பானை உடைந்து சிதையும். இவ்வாறு ஆகும்போது உணவின்றி வருந்துவர். பெரிய நாட்டிலே உள்ள மக்கள் அனைவரும் காணும்படியாக இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வர். ஆதலால் திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளை காலம் நீட்டிக்காமல் அதாவது மிக விரைவில் மனத்தால் நினைந்து உய்யுங்கள் என்கிறார். ( திருவாய் மொழி நூற்றந்தாதி ; பாசுரம்- 3007)

    ReplyDelete