குழந்தை பிறந்த 3 வது மாதம் குழந்தைக்கு சூரியனை காண்பிக்க வேண்டும் ..நான்காவது மாதம் சந்திரனையும் ,பசுவையும் காண்பிக்க வேண்டும்...6வது மாதம் குழந்தைக்கு அன்னம் ஊட்ட வேண்டும்..அது குருவாயூராக இருந்தால் சிறப்பு.
குழந்தை படிக்க துவங்கும்போது கணபதி மந்திரங்கள்,அபிராமி அந்தாதி போன்ற சின்ன சின்ன ஸ்லோகங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..குழந்தையின் முன்பு தாய் எப்போதும் குளித்து, சுத்தமாகவும்,நல்ல சிரிப்புடனும்,கலகலப்பாக பழக வேண்டும் தந்தை சுறுசுறுப்புடன் காலை கடமைகளை குழந்தைக்கு பழக்க வேண்டும்..!!
அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அருமை அய்யா.
ReplyDeleteஅபிராமி அந்தாதி :
Thu. 21, Aug. 2025 at 10.51 am.
*திருக்கடவூர்*
*அபிராமியம்மை பதிகம் :*
கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர்
கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்ஒரு
துன்பமில் லாதவாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின்வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி! அபிராமியே! − 1
*விளக்கம் :*
*அலைவீசும் பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் திருமாலின் தங்கையே !
*பழமையான திருக்கடவூரில் வாழும் இறைவியே !
*அமிர்தகடேசுவரரின் இடப்பாகத்தை விட்டுப் பிரியாத சுகபாணியே (சுகபாணி − நன்மை செய்யும் திருக்கரத்தை உடையவள்).
*அருள்மிக்க வாமியே ! அபிராமி அம்மையே ! (வாமியே − இடப்பாகத்தில் இருப்பவள் ).
*மறந்து போகாத கல்வி அறிவையும்..
*குறைவு இல்லாத ஆயுட் காலத்தையும்..
*யாதொரு வஞ்சனையும் கொள்ளாத நண்பர்களையும்...
*பழுதுபடாத வளப்பத்தையும்...
*பொலிவு குன்றாத இளமைப் பருவத்தையும்...
*கொடு நோய்கள் இல்லாத உடம்பையும்...
*கலங்காத மன உறுதியையும்...
*அன்பு நீங்காத மனைவியையும்....
*பரம்பரை அற்றுப்போகாத மக்கட் பேற்றையும்....
*கீழ்மைப்படாத புகழையும்....
*சொன்னது மாறாத வாக்குறுதியையும்....
*தடங்கல் நேராத கொடைத் தன்மையையும்...
*கொடுத்தாலும் குறையாத செல்வத்தையையும்....
*வளையாத செங்கோல் ஆட்சியையும்....
*யாதொரு துன்பமும் இல்லாத வாழ்க்கையையும்....
*தூய்மையான உனது திருவடிகளில் வைக்கும் அன்பையும் எனக்குக் கொடுத்து.....
*உயர்ந்த அடியார் கூட்டத்தோடு என்னைச் சேர்ப்பாயாக !
(குறிப்பு : அபிராமி அம்மைப் பதிகத்தில் 11-பாடல்கள் உள்ளன.)
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்..
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan438@gmail.com