Monday, 20 January 2025

ஒரு நாயகமாய் ஓட

ஒரு நாயகமாய் ஓட வுலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ –4-1-1

2 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தலைப்பு : "ஒரு நாயகம்" திருவாய்மொழி சிறப்பு அய்யா. இதற்கு அடியேன் பொருள் கூறுகிறேன். அரசர் ஒருவர் ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகம் முழுவதையும் ஒருசேர ஆண்டு வருகிறார். போரில் தோற்று அரசை இழக்க நேரிட்டால் உயிர் வாழப் பிச்சை எடுக்க வேண்டி இருக்க... அப்பொழுது இரவில் பிச்சை எடுக்கையில், பானையுடன் செல்லும்போது கருத்த நாய் கவ்வும்; பானை உடைந்து சிதையும். இவ்வாறு ஆகும்போது உணவின்றி வருந்துவர். பெரிய நாட்டிலே உள்ள மக்கள் அனைவரும் காணும்படியாக இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வர். ஆதலால் திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளை காலம் நீட்டிக்காமல் அதாவது மிக விரைவில் மனத்தால் நினைந்து உய்யுங்கள் என்கிறார். ( திருவாய் மொழி நூற்றந்தாதி ; பாசுரம்- 3007)

    ReplyDelete
  2. Tue. 22, July, 2025 at 7.45 pm.

    *மாண்டூக்ய உபநிஷத்*

    *சாந்திபாட (சாந்தி மந்திரம்) :*

    பத்ரம் கர்ணேபி : ச்ருணுயாம தேவா: பத்ரட்
    பச் யேமா௯ஷபி ர்யஜத்ரா: | ஸ்தி ரைரங்கை ஸ்துஷ்டு
    வாம்ஸஸ்தனூபி : | வ்யசே ம தே வஹிதம் யதா யு :
    ஸ்வஸ்தி"ந இந்த் ரோ வருத் த ச ரவா:| ஸ்வஸ்தி ந:
    பூஷா விச் வவேதா:| ஸ்வஸ்தி நஸ்தார்௯்ஷயோ
    அரிஷ்டனேமி:| ஸ்வஸ்தி நோ
    ப் ருஹஸ்பதிர் த தா து|
    ஓம் சாந்தி: சாந்தி சாந்தி: ||

    *பொருள் :*

    *தேவா − ஓ தேவர்களே
    *கர்ணேபி − காதுகளால்
    *பத்ரம் − நல்ல விஷயங்களை
    *ச்ருணுயாம − கேட்க வேண்டும்
    *யஜத்ரா − பூஜிக்கத் தகுந்தவர்களே
    *அ௯ஷபி: − கண்களால்
    *பத்ரம் − நல்ல விஷயங்களை
    *பச்யேம − காண வேண்டும்

    *ஸ்திரரங்கை − உறீதியான அங்கங்களுடன் கூடிய
    *தனூபி − உடலுடன்
    *யதாயு − ஆயுள் முழுவதும்
    *துஷ்டீ வாம்ஸ − உங்களைத் துதிக்க வேண்டும்.

    *தேவ ஹிதம் − தேவர்களுக்கு"நன்மை செய்த வண்ணம்
    *வ்யசேம − வாழ வேண்டும்
    *வ்ருத்தச்ரவா − பழம்புகழ்பெற்ற
    *இந்த்ர − இந்திரன்
    *ந − நமக்கு
    *ஸ்வஸ்தி − நன்மை செய்யட்டும்

    *விச்வ வேதா − எல்லாம் அறிகின்ற
    *பூஷா − சூரியன்
    *ந − நமக்கு
    *ஸ்வஸ்தி − மங்கலம் செய்யட்டும்.
    *அரிஷ்ட்டநேமி − தீமையை அழிக்கின்ற
    *தார்௯்ஷய − கருடன்
    *ந − நமக்கு
    *ஸ்வஸ்தி − நன்மை செய்யட்டும்
    *ப்ருஹஸ்பதி − பிருகஸ்பதி
    *ந − நமக்கு
    *ஸ்வஸ்தி − நன்மை
    *ததாது தரட்டும்.

    *விளக்கம் :*

    *தேவர்களே ! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும்.

    *பூஜிக்கத் தகுந்தவர்களே, கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும்.

    *உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும்.

    *தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்.

    *பழம்புகழ்பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும்.

    *எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும்

    *தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும்.

    *பிருஹஸ்பதி நமக்கு நன்மை தரட்டும் !

    *மீண்டும் சந்திக்கலாம்..!*
    Jansikannan438@gmail.com

    ReplyDelete