Thursday, 26 June 2025

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?


சாப்பிட்டவுடன் சுடசுட காபி குடிக்க பிடிக்குமா? இதேபோல் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!

பலருக்கும் சாப்பிட்டவுடன் சுடசுட டீ அல்லது காபி குடிக்க பிடிக்கும். சிலருக்கு குளுகுளு ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கவும். ஆனால் இவ்வாறு செய்வது நம் ஜீரண மண்டலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை தெரியாமல் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் இதேபோல் சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழங்கள் என்னென்ன


குளியல்: சாப்பிட்டவுடன் குளிப்பதை ஒருபோதும் செய்யாதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் உடல், வயிறில் உள்ள உணவை ஜீரணம் செய்யும் வேலையில் இறங்கிவிடம். அப்போது நாம் குளிப்பதால் ஜீரணம் செய்யும் வேலையை தடுத்தி நிறுத்துவது போல் ஆகிவிடும். சாப்பிட பின் 2 மணிநேரம் கழித்து குளிப்பது நல்லது என கூறுகின்றனர்.


வொர்கவுட்: அதிகம் சாப்பிட்டுவிட்டோம் அல்லது காலையில் உடற்பயிற்சி செய்ய மறந்துவிட்டோம் என்று ஏதாவதொரு காரணத்திற்காக உணவு சாப்பிட்டபின் வொர்கவுட் செய்வது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இது தவறான யோசனை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பது நல்லது.


ஜூஸ்: சாப்பிட்டவுடன் ஃப்ரெஷ் ஜூஸ் அல்லது கூலிங்காக பெப்சி, கொக்கோகோலா போன்ற பானங்களை குடிப்பது ஜீரண சக்தியை பலவீனமாக்கும். உணவை ஜீரணம் செய்யும் அமிலங்கள் உற்பத்தி செய்வதை இது தடுப்பதாக கூறுகின்றனர். ஆகவே உணவுக்கு பின் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.


தூக்கம்: சிலருக்கு சாப்பிட்டவுடன் தூக்கம் வரும்.. உடனே தூங்க சென்றுவிடுகின்றனர். இப்படி செய்வதால் உணவு ஜீரணமாவதில் தாமதம் ஏற்பட்டு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வார காரணமாக அமைந்துவிடும்.


புகைபிடித்தல்: சிலருக்கு சாப்பிட்டவுடன் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். அப்போது தான் சாப்பிட்டது போல் இருக்கும் என்றும் கூறுவர். இவ்வாறு செய்வது உணவு ஜீரணமாவதை தாமதமாக்கும். அஜீரண கோளாறு ஏற்படும். ஆகவே உணவுக்கு பின் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும்.
பால்

காபி, டீ: நம்மில் பலருக்கும் இந்த பழகும் இருக்கும். உணவுக்கு பின் சுடசுட காபி அல்லது டீ சாப்பிடுவது ஜீரணத்தை அதிகப்படுத்தும் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் டீ, காபி உணவில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. செரிமான பிரச்சனை ஏற்பட காரணமாக அமைப்பும். ஆகவே உணவுக்கு பின் டீ, காபிக்கு நோ சொல்லிவிடுங்கள்.


3 comments:

  1. அருமை.. அய்யா வெ.சாமி அவர்களே. எனக்கும் காப்பி அருந்த ஆசை உண்டு. ஆனால் டிபன் சாப்பிட்டால் மட்டுமே காப்பி எடுத்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
  2. Sun. 13, July, 2025 at 9.34 am.

    தீபம் அணையாதிருக்க :

    சாதாரண சலவைத் துணியில் சாதாரண உப்புத்தூளை வைத்து வத்தியாகத் திரித்து, அகலில் போட்டு, எவ்வித எண்ணையாகிலும் ஊற்றி, விளக்கேற்றி வைக்க எவ்வித் காற்றடித்தாலும் தீபம் அணையாது .

    முயன்றுதான் பாருங்களேன்..!

    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  3. Sun. 13, July, 2025 at 9.25.

    பாம்பு விஷக்கடி :

    பாம்பு ஒருவரைக் கடித்தால், அதன் விஷம் ஏறாதிருக்க. பாம்பு கடித்தவுடனே அவர்களுடைய சிறுநீரைப் பிடித்துக் குடிக்க கொடுக்க அவ்விஷம் அகலும்.

    செய்து பயனடையுங்கள்.

    Jansikannan438@gmail.com

    ReplyDelete