Monday, 28 July 2025

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று




மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

2 comments:

  1. Mon. 18, Aug. 2025 at 10.30 pm.

    *அறிந்து கொள்வோமே :*

    *வியாகர்னா − இலக்கணம்

    *கல்பா − சடங்குகள்

    *சந்தஸ் − இசை

    *ஜம்புத் தீவு − பாரத நாடு

    *காலத்தின் கண்ணாடி − இலக்கியங்கள்

    *தக்காணமும், தென்னிந்தியாவும் சேர்ந்த பகுதி − தட்சிண பதம்

    *புராணங்களில் "நடு நாடு" − சிந்து, கங்கைச் சமவெளி

    *சிந்து, கங்கைச் சமவெளியின் நீளம் − சுமார் 3,200 கி.மீ.

    *நிருத்தா − சொல்கூறு

    *சிகா − ஓவியங்கள்

    *ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் − திராவிடர்கள்.

    *ஆரியர்களின் சமுதாய அமைப்பில் சூத்திரர்களாக இணைந்தவர்கள் − திராவிடர்கள்.

    *இந்தியாவின் 4−திசைகளிலும் மடங்களைத் தோற்றுவித்தவர் − சங்கரர்.

    *பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர் − டி.கே. சிதம்பரநாதர்

    *இந்தியப் பண்பாடு என்பது − இறையுணர்வும், ஆன்மீக வேட்கையோடும் தொடர்புடையது.

    *வாழ்வதற்குரிய உபநிடத கருத்துகளை வலியுறுத்துவதேப் பண்பாடு என்றவர் − ராமசாமி அய்யர்.

    *இந்தியாவை பல இனங்களின் *அருங்காட்சியகம்* என்றவர் − டாக்டர். ஸ்மித்

    *வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்* என உரைத்தவர் − வள்ளலார்.

    *உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைப் பற்றி கூறும் புராணம் − தமிழ் புராணம்.

    *ஆற்றுப்படை இலக்கியங்கள் − மன்னர்களின் கொடைத் தன்மையை விளக்குகிறது.

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  2. அய்யா. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். சினிமா பாடல் அருமை அய்யா.

    ReplyDelete