Monday, 28 July 2025

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா





ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் 
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா


1 comment:

  1. அய்யா.வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். சினிமா பாடல் அருமை அய்யா. அப்புறம் அப்பர் சுவாமிகள் எழுதிய தனித் திருத்தாண்டகத்திலும் (68. (6) (திருப்புகலூர்) இப்பாடல் வருகிறது.. ஆனால் அப்பர் சுவாமிகளின் வரிகள் வேறு அய்யா.
    அப்பாடலைக் கொடுக்கிறேன்..

    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
    ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகி வித்தால் ஆரொருவர் உருகா தாரே
    பாட்டு வித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
    காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    கண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

    இதன் பொருள் :
    *இறைவன் ஒருவரை ஆட்டுவித்தால் ஆடாதவர் இல்லை.
    *அடக்கினால் அடங்காதவர் இல்லை.
    *பக்தியின் சீலம் இன்றி ஓட்டுவித்தால் ஒருவராலும் மாற்ற முடியாது. உள்ளிருந்து உருகுமாறு செய்பவர் அவரே ! *பாடச் செய்வதும், பணியச் செய்வதும் அவரே !
    *அப்பெருமான் ஒன்றினைக் காட்டினாலன்றிப் பிறர் யாரும், எதனையும் காண முடியாது. இது ஈசன் உள்ளிருந்து புரியும் நிலை.

    இதன் கருத்து யாதெனில்... இறைவற் திரோதான சக்தியாய் நின்று உயிர்களைப் பந்தப்படுத்தி, வினைகளைக் களைந்தும், பின் பக்குவம் எய்திய பின், அருட் சக்தியாய் நின்று, முத்திப் பேற்றினை வழங்கும், அவனது அளவற்ற பேருபகாரங்களை பதிந்து கூறியது எனலாம்.

    அய்யா வெ.சாமி, அவர்கள் இவ்வாய்ப்பை தங்கள் பதிவின் மூலம் அடியேனுக்கு கொடுத்தமைக்கு மகிழ்கிறேன். திருச்சிற்றம்பலம் அய்யா

    ReplyDelete