Saturday, 2 August 2025

உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்வோர் கவனத்திற்கு.. இளநீர் குடிக்கக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?



உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்வோர் கவனத்திற்கு.. இளநீர் குடிக்கக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?

 
வெயிலுக்கு இதமாக இளநீர் குடிப்பது உடலுக்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று சொல்லப்பட்டாலும், அது அனைவருக்கும் ஏற்றதல்ல என்று தெரிய வந்துள்ளது. இளநீரைப் பருகுவது சில தரப்பினருக்கு நன்மையை விட அதிகளவில் சிக்கலைக் கொடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதுகுறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் என்னதான் வடகிழக்கு பருவமழை நெருங்கினாலும், வெயில் மட்டும் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் வெயிலுக்கு இதமாக இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இளநீர் தாகத்தைப் போக்கி புத்துணர்ச்சியை அளிப்பதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். குறிப்பாக உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Who Should Avoid Drinking Tender Coconut Water Health Risks amp amp Expert Advice


ஆனால் இளநீர் அனைத்து தரப்பினருக்குமானது அல்ல என்று தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு நன்மையை விடத் தீமையையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சிறுநீரக பிரச்சனைகள் இருப்போர் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இளநீரில் அதிகளவிலான பொட்டாசியம் இருக்கிறது.


இதனால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தங்களது உடலில் இருந்து பொட்டாசியத்தை வெளியேற்ற சிரமங்களைச் சந்திக்க நேரிடும். அதிகளவிலான பொட்டாசியம் உடலில் கலந்தால், அது இதயத்துடிப்பைப் பாதிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பி லோ - கலோரி டயட் இருப்பவர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இளநீரில் 45 முதல் 60 கலோரிகள் வரை இருந்தாலும், அது உடல் எடையை அதிகரிக்க கூடியதாகும். இதனால் இளநீர் அருந்துவதற்குப் பதிலாக, இந்த தரப்பினர் சாதாரண தண்ணீரையே குடிப்பதே நல்லது.




அதேபோல் தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள் இளநீர் அருந்துவதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் சில மருந்துகள் உட்கொண்ட பின், அது உடலில் செயல்படுவதை இளநீர் தடுக்கக் கூடும். அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், அந்த மருந்துகளின் செயல்பாட்டுக்கு சில சிக்கல் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உடல் அலர்ஜி ஏற்படும் நபர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்ட பின், உடலுக்கு பொட்டாசியத்தை விடவும் சோடியம் தான் முக்கியமான எலக்ட்ரோலைட்டாகும். இளநீரில் குறைந்த அளவிலான சோடியம் மட்டுமே உள்ளது. அதிகளவில் பொட்டாசியம் தான் இருக்கிறது.

இளநீருக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளியில் அதிக சோடியம் உள்ளது. இதனால் அடுத்த முறை இளநீர் குடிப்பதற்கு முன்பாக இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாகக் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின் இளநீர் பருகும் நபர்கள், இனி மாற்று பழவகைகளைச் சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்குப் பயனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment