Saturday, 29 September 2012

திருநீறு கூறும் திருவாக்கு


எந்த ஒரு பொருளையும் தீயில் போட்டால் முதலில் அது கருப்பு நிறமாக மாறும். அதன் பின்பும் அக்னியில் புடம் போட்டால் அந்த பொருள் நீற்றுப்போகும். பிறகு சுத்த வெளுப்பு நிறமாக மாறிவிடும். அதன்பிறகு தீயில் இட்டாலும் அது மாறாது, அதுவே முடிவான நிலை.
திருநீறு அணிவதன் பலனாக பில்லி, சூனியம் நம்மிடம் அண்டாது. தீட்டுக்களை கழிக்கும் சக்தி திருநீற்றுக்கு உண்டு. ஆன்மிக ஞானத்தையும், புத்திக் கூர்மையையும் அளிப்பதுடன், நெற்றியில் திருநீற்றை பூசும்போது முகத்திற்கு பொழிவையும் கொடுக்கும். விபூதி என்பதும் ஐசுவரியம் என்பதும் ஒரே பொருளை குறிக்கும்.

1 comment: