Saturday 29 September 2012

ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?

ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு கிடையாது , பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது , ஜாதக
ர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றால் மட்டுமே , வாழ்க்கையில் நலம் பெற முடியும் என்றும் , தனது பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு நன்மையில்லை என்றும் , புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது , மேலும் பல ஜோதிடர்களின் கருத்தும் இதுவாகவே
இருக்கிறது , இதில் உண்மை என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் .

ஒருவருடைய ஜாதக அமைப்பை கணிதம் செய்யும் பொழுது லக்கினத்தில் இருந்து , ஐந்தாம் பாவகத்தில் ராகு கேது இருக்கிறதா (ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) என்பதை முதலில் உறுதி செய்துவிட்டு , ஜாதக பலன் காணுவது சரியான ஜாதக பலனை சொல்ல உதவி புரியும் , மேற்கொண்டு ஐந்தாம் பாவகத்தில் ராகுவோ கேதுவோ இருப்பின் (அதாவது ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) எந்த ராசியில் இருக்கிறார் என்பதை சரியாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்வது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் தன்மையை உறுதி செய்ய நமக்கு உதவி புரியும், ( அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? , கெட்டு விட்டதா ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் .

மேற்கண்ட அமைப்பில் கணிதம் செய்யும்பொழுது ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிழ்க்கண்ட ராசிகள்
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக வருமாயின் , இந்த ராசிகளில் ராகுவோ கேதுவோ அமரும் பொழுது ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதாகவும் , தனது பூர்வீகத்தில் இருப்பதால் எவ்வித தீமையும் ஏற்ப்படாது என்றும் , புத்திர பாக்கியத்திற்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது என்றும் உறுதியாக சொல்ல முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து , அதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் நன்மை தரும் ராசிகள் :

1 ) ரிஷபம் , துலாம் ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து ,
இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு
நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

2) மிதுனம் , கன்னி ( புதன் சூரியனுக்கு 14 பாகைக்கு மேற்பட்டு இருக்க வேண்டும் ) ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம்
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில்
சந்தேகமே இல்லை .

3 ) தனுசு , மீன ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும்,
புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

மேற்கண்ட ராசிகள் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இந்த ராசிகளில் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமர்ந்தால் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , பூர்வீகத்தில் ஜாதகர் குடியிருப்பதால் வாழ்க்கையில் சகல முன்னேற்றமும் ஏற்ப்படும் , குழந்தை பாக்கியத்தில் ஜாதகருக்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது , பேர்சொல்ல ஆண் வாரிசு நிச்சயம் உண்டாகும் .

எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் ராகு கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால் , புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது ஜோதிட கலையை பற்றி தெரியாத கத்துக்குட்டிகள், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் போலி ஜோதிடர்கள் சொல்லும் ஒரு வாய்ஜாலம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதே ஜோதிட தீபத்தின் ஆவல் , மேலும் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி அவைகள் ஜாதகருக்கும் , அமர்ந்த பாவகத்திர்க்கும் நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே சரியான ஜோதிட பலனாக இருக்கும் , அதுவே ஜோதிடர்களை நம்பி வருபவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும் .

No comments:

Post a Comment