Monday, 24 September 2012

நந்தி ஏன் இறைவனைத் தாங்குகிறது?


நந்தி ஏன் இறைவனைத் தாங்குகிறது?
.


இளமை, செல்வம், சுகபோகங்கள் யாவும் நிலையற்றவை. நாம் செய்த நற்செயல்களின் பலன் மட்டுமே என்றும் நம்முடன் வரும். ஒருவனுக்கு தர்மமே உற்ற துணை என்பதை மணிமேகலை காப்பியம் அறமே மிக்க விழுத்துணையாவது என சிறப்பித்துக் கூறுகிறது. திருவள்ளுவரும் அறத்தால் வருவதே இன்பம் என்று உண்மையான இன்பம் தர்மத்தாலேயே உண்டாகும் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, வாழ்நாளை வீணாக கழிக்காமல், தர்மம் செய்து பயனுள்ளதாக கழிக்க வேண்டும். சிவபெருமானை தாங்கும் நந்திதேவர், தர்மத்தின் அம்சம் என்பதால் அதற்கு அறவிடை என்றும் பெயருண்டு. விடை என்றால் காளை. ஆக கடவுளையே தாங்கும் பேறு தர்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒருவன் தர்மத்தை காப்பானேயானால் தர்மம் அவனைக் காக்கும். இதனை தர்மோ ரக்ஷதி: தர்மம் ரக்ஷித: என்பார்கள். இதிலிருந்து தர்மத்தை பாதுகாப்பவர்கள் தன்னையே காத்தவர்களாகிறார்கள்.

No comments:

Post a Comment