Monday, 24 September 2012

இருமலைக் குணப்படுத்தும் துளசி விதைகள்

இருமலைக் குணப்படுத்தும் துளசி விதைகள்


துளசி செடி மூலிகை வகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு இரசாயன கலவைகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பண்புகள் உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாகும். துளசி மூலிகையில் ஒரியாண்டின் மற்றும் விசெயின் பாலிபினாலிக் ஃபிளவனாய்டுகள் கொண்டுள்ளது.
துளசி இலை உடல் நலம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது. யூஜினால், சிட்ரோநெல்லோல், லினாலோல், சித்திரல்,லிமோனின் மற்றும் தேப்பினியோல் போன்ற முக்கியமான எண்ணெய்கள் உடல் சுகாதாரத்திற்கு நன்மை சேர்க்கிறது. இந்த சேர்மங்கள் எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியல் பண்புகளை கொண்டிருக்கிறது.
இந்த மூலிகை மிகக் குறைந்த கொ-ழுப்பு சத்துகள் மற்றும் கலோரி வகைகளை கொண்டுள்ளது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருட்களான தாதுக்கள் மற்றும் சுகாதாரத்திற்கு இன்னியமையாத வைட்டமின்களை ஆதாரமாக கொண்டுள்ளது
துளசி விதை இன்ஃப்ளூயன்ஸா, மற்றும் காய்ச்சல், குளிர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கின்றது. இந்த விதை வலிப்பு குறைவு மருந்துகளின் பயன்களை கொண்டுள்ளதால் கக்குவான் இருமல் சிகிச்சைக்கு துளசி விதையை பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக துளசி இருமலுக்கும் குழந்தைகளின் சளித்தொல்லையை போக்கவும் சிறந்தது.

No comments:

Post a Comment