Sunday 21 October 2012

புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்

ஒ! காசிப் புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி நான் பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுத்த ஜீவன் மரிக்கிறான். கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால் ஒரு கிரியையும் செய்ய வேண்டியதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இருந்தால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து ஊர்க்குழந்தைகளுக்கு  பால் பாயாசம் போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும். குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரெண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களை செய்யலாம். விருசொர்ச்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்தர்காகச்  செய்ய வேண்டியதில்லை. மரித்தவன் பாலகனாயினும் இளைஞனாயினும் விருத்தனாயினும், உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங் குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும். இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும். பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும், மூன்று வயது வரையில் பாலகன் என்றும், ஆறு வயது வரையில் குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
    ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்துவிட்டால் விருஷோந்தம்  செய்ய வேண்டும். பால் தயிர் வெல்லம் சேர்த்து பிண்டம் போடல் வேண்டும். குடம்,குடை,தீபம் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மறுபிறவியில் மரமாகத் தோன்றுவான். அந்த மரம் நெல் குத்தும் உலக்கை செய்யப்பட்டு விடும். பூணுலை இடதுபக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறுஜென்மத்தில் நல்ல குளத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜெனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத்தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்கிறது.
தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து பகலில் அவற்றின் உள்ளே சூரியனைப் பார்த்தாலும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனைப் பார்த்தாலும் ஒவ்வொரு குடத்திலும் சந்திர சூரிய உருவங்கள் தெரிவது போல், ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாக பிறக்கின்றான். அதனால்தான் தைதந்தைகளைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றான். ஆயினும் குருடனுக்கு குருட்டுப் பிள்ளையும், ஊமைக்கு ஊமைப் பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று தயையனுக்கும் பொருந்திருக்கும் என்றார் திருமால்.
கருட பகவான், பரமபதியை வணங்கித் தொழுது ஜெகன்னாதா! பலவிதமான புத்திரர்கள் பிறக்கின்றார்கள். விலைமகளுக்கு பிறந்த புத்திரன் தந்தைக்கு கருமம் செய்யலாமா? அப்படி அவன் கருமஞ் செய்தால் அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? பெண் ஒருத்தியிருந்து, அவள் வயிற்றிலும் பிள்ளை இல்லை என்றால் அவன் மரித்தபின் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும். இவற்றை விலக்கியருள வேண்டும் என்று கேட்டார். பக்தவச்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்.
          புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் புத் என்ற நரகத்தை அந்த ஜென்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திகுமே  புத்திரன் பிறந்தால், அவள் குலத்துப் பிதிர்த் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்கு முதல் மகனே அதாவது தலைச்சவனே தன் தந்தை மரித்தால் அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்ய கடமைப்பட்டவன். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள் இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக் கூடும்.
              ஒருவன் தனக்கு பௌத்திரன் பிறந்து அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பானாகில்  இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகை அடைவான்.  பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன் அந்தப் பெண்ணுக்கு விலைகொடுக்காமல் திருத்துழாயோடு  அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல் அந்தப் புத்திரன் தன் குலத்து இருபோதொரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.அவ்வாறு பிறந்த புத்திரனே தாய்தந்தையருக்கு கர்மஞ் செய்யத்தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம். அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின், செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவனைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று. அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது.காமக் கிழத்தியின் புத்திரராயினும் அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம். ஆனால் அந்தணருக்குப் போஜனம் செய்யலாகாது. வேசிப்புதிரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின் அவனும் சாப்பிட்டவனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள். நல்ல குடும்பத்தின் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால், மக்கள் அனைவரும் சற்புதிரனையே பெறுதல் வேண்டும் என்றார் திருமால். 

No comments:

Post a Comment