Monday, 22 October 2012

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார் வாங்கலாமா

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களின் ஆதிக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு வரவேற்பு கூடும் என்ற கணக்கில் முன்கூட்டியே துண்டு போடும் வேலைகளில் இறங்கியிருக்கின்றன கார் நிறுவனங்கள். இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் வாங்காலாமா?, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களைவிட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார் வாங்கும்போது கூடுதல் முதலீட்டை செய்ய வேண்டியிருக்கும். என்ட்ரி லெவல் கார்களில் ரூ.60,000 வரை கூடுதலாக இருக்கின்றன.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் ஆற்றல் விரயம் குறைவாக இருக்கும் என்பதால் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். ஆட்டோமேட்டிக் கார்கள் குறைவான மைலேஜ்தான் தரும்.
ஒரு வேளை பிரேக்டவுன் ஆகும்போது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களின் தொழில்நுட்பம் கொஞ்சம் சிக்கலானது என்பதால் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் லேபர் கட்டணம் ஆகியவை கூடுதலாக இருக்கும்.

டிரைவிங்கில் 'த்ரில்' ...!!

கார் ஓட்டும்போது த்ரில் அனுபவம் வேண்டும் என்பவர்களுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் சிறந்த அனுபவத்தை தரும். ஆட்டோமேட்டிக் கார்களில் வேகத்துக்கு தக்கவாறு  தானியங்கி கியர் மாற்றம் நடைபெறுவதால் டிரைவருக்கு த்ரில் அனுபவம் இருக்காது.

கியரை தட்டுங்க.. போய்கிட்டே இருங்க..

மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் டிரைவர் எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தவிர, போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கிளட்ச் மற்றும் கியர்களை அடிக்கடி இயக்க வேண்டும். ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களில் டிரைவர் சற்று சிரமமில்லாமல் டிரைவிங் செய்ய முடியும்.

டிரைவிங் ஆற்றல்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களை ஓட்டுவதற்கு கூடுதல் திறனை பெற்றிருப்பது அவசியம். ஆட்டோமேட்டிக் கார்களில் கிளட்ச் பெடல் இருக்காது என்பதால், ஸ்டீயரிங் கன்ட்ரோல் பெற்றுவிட்டாலே சமாளித்து ஓட்டலாம். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்குக்கு ஒரு கால் மட்டுமே பயன்படுத்த வேண்டிருப்பதால் டிரைவிங் எளிது

எது பெஸ்ட்?

மைலேஜ் முக்கியம், அதிக முதலீடு செய்ய இயலாது என்பவர்களுக்கும், த்ரில்லான டிரைவிங் அனுபவத்தை விரும்புவர்களுக்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்தான் சிறந்தது. பணம், மைலேஜ் ஒரு பொருட்டில்லை, சொகுசாக செல்ல வேண்டும் என்பவர்களுக்கு ஆட்டோமேட்டிக் கார்கள் சிறந்த சாய்ஸ். குறிப்பாக, பெண்களுக்கு ஆட்டோமேட்டிக் கார்கள் சிறந்ததாக இருக்கும்.


2 comments: