Saturday, 6 October 2012

தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்


சுப்பிரமணியர் கண்டவீர்ப்பு என்ற இடத்தில் தங்கி இருந்த பொழுது மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும் சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணிய கடவுளுடன் திருமணம் நடக்க  வேண்டும் என்று ஆசை கொண்டு சரவணப்பொய்கைக்கு வந்து தங்கி தவம் இருந்தனர்.
அவர்கள் தவத்தை மெச்சி அவர்கள் முன் காட்சி தந்த சுப்பிரமணிய கடவுள் அமிருதவல்லியை நோக்கி நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன் என்றார். அது போலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார். அதனால் அவள் சிவ முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடர் குலத் தலைவனால் வள்ளி என பெயரிட்டு வளர்க்கப்பட்டாள்.
அமிருதவல்லி சிறிய பெண்ணாக வடிவெடுத்து இமயமலையில் இருந்த இந்திரனிடம் சென்று நான் மகாவிஷ்ணுவின் மகள் ஆவேன். என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை உங்களுக்குத் தந்து இருக்கின்றார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள். அதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதனை அழைத்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்கும்படிக் கூறினார்.
அதனால்தான் அவள் யானையால் வளர்க்கப்பட்டாள் என்பதைக் குறிக்கும் விதத்தில் தெய்வானை என்ற பெயர் பெற்றாள். சூரபத்மனை அழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கு  திருமணம் ஆயிற்று.

No comments:

Post a Comment