Friday, 12 October 2012

துளசியை வழிபட வேன்டிய காலங்கள்

1.அன்றாடம் பெண்களும், ஆண்களும் வழிபடலாம்.
2.திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.
3.ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட்டால்,  நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
4.திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால், நன்மக்கட்பேறு அடைவர்.கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சம் நீங்கும்.
5.துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
6.துளசி விரத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.
7.வேத விற்பன்னர் மூலம் அஷ்டாஷரம்,புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு பெற்றால் இஷ்டமான பலன்  உடனே கிட்டும்.
8.பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சிணுங்கியை வைத்து வழிபட்டு வந்தால் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுள் பெறுவர்.
9.வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.
10.ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன் பெறுவர்.
11.மகா விஷ்ணுவிற்கும்,ஸ்ரீதுளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலன் அடையலாம்.

1 comment:

  1. அய்யா... வெ.சாமி அவர்களே..!

    *துளசி காயத்ரீ* :

    ஓம் ஶ்ரீத்ரிபுராய வித்மஹே துளஸீபத்ராய தீமஹி
    தந்நோ துளஸீ : ப்ரசோதயாத்.


    ஶ்ரீ துளசி ஸ்தோத்ரம் :

    ஶ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா...
    வெள்ளிக் கிழமை தன்னில் விளங்கு
    கின்ற −மாதாவே....
    செவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க
    வந்த செந்துருவே....
    தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்....
    பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே..
    பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
    அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய்−நமஸ்தே
    அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய்−நமஸ்தே
    ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே...
    அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் −நமஸ்தே....
    வனமாலை யென்னும் மருவே நமஸ்தே
    வைகுண்ட வாசியுடன்−மகிழ்வாய் −
    நமஸ்தே....
    அன்புடனே நல்ல அருந்துளசி−கொண்டு
    வந்து....
    மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல
    நீர் ஊற்றி...
    முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்
    போல் கோலமிட்டு....
    செங்காவி சுற்றுமிட்டுத் திருவிளக்கும்
    ஏற்றி வைத்து...
    பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து...
    புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு...
    என்ன பலனென்று ஹ்ரு௯ஷீகேசர் தான் கேட்க...
    மங்களமாய் துளசி மகிழ்ந்துதானே உரைப்பாள்...
    மங்களமாய் என்னைவைத்து மகிழ்ந்து
    உபாஸித்தவர்கள்...
    தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்....
    அரும்பிணியை நீக்கி அஷ்டஐஸ்வர்யம் நான் அளிப்பேன்...
    தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்....
    புத்திரனில்லாதவர்க்குப் புத்திரபாக்யம்
    நான் அளிப்பேன்...
    கன்னிகைகள் பூஜைசெய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்...
    கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்....
    பக்தர்கள் பூஜைசெய்தால் மோ௯ஷபதம்
    நான் கொடுப்பேன்...
    கோடிக்காராம் பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து...
    கொம்புக்குப் பொன்னமைத்துக் குழம்புக்கு வெள்ளிகட்டி...
    கங்கைக் கரை தனிலே கிரஹண புண்யகாலத்தில்...
    வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்தபலன்....
    நானளிப்பேன் சத்தியமென்று நாயகியும்
    சொல்லலுமே....
    அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கையிட்டார்....
    இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்...
    அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்....

    ஜபம் : தாயே ஜகன்மாதா அடியாள் செய்கின்ற பூஜையை ஏற்றுக்கொண்டு
    அடியாள் செய்த சகல பாபங்களையும்
    மன்னித்து காத்து ர௯ஷித்து கோரும்
    வரங்களை கொடுத்து அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே.


    (பரதேவி = பெண் தெய்வம் )

    *************



    ReplyDelete