Friday 19 October 2012

ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி? யாரைப் பூசிப்பது?


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
யார் யாரைப் பூசிப்பது?
பகைவனை வெல்ல -காளியை வழிபடவும்.
செல்வம் விரும்பினால் -சண்டியைப் பூசிக்கவும்
அரசர்களை மயக்க -சாம்பவி பூசை செய்யவும்
இன்னல், எளிமை அகல -துர்க்கையை வழிபடவும்
போரில் வெற்றிபெற  -துர்க்கையை வழிபடவும் கொடும்
பகைவனை அழிக்க -துர்க்கையை வழிபடவும்
மறுமையில் நன்மை பெற  -துர்க்கையை வழிபடவும்
மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்.
நோய் விலக -ரோகிணியை வணங்கவும்.
ஊசியை பயன்படுத்த வேண்டாம்…..
மகிஷா சூரனை வதம் செய்ய சக்தி துர்க்கா தேவியாக அவதாரம் எடுத்து, ஊசி முனையில் தவம் இருந்தாள். அதன் பின்தான் போரிட்டு மகிஷாசூரனை கொன்று மகிஷாவர்த்தினி என்று பெயர் எடுத்தார். ஊசி முனையில் தவம் இருந்ததால் நவராத்திரி காலத்தில் வீட்டில் ஊசியை பயன்படுத்தக்கூடாது

No comments:

Post a Comment