Friday, 30 November 2012

புத்தாண்டு பலன் ரிஷபம் ராசி 2013 ரிஷபம்


ரிஷப ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் ரிஷபம் ராசி 2013 | rishaba rasi 2013
ரிஷபம்:
கிருத்திகை(2,3&4); ரோகிணி;மிருகஸ்ரீஷம ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
[சாதகமான காலம்:--ஆண்டின் துவக்கம் முடஹ்ல் 30.1.2013 வரையிலான  குருவின் வக்கிர சஞ்சார காலம். மற்றும் 27.5.2013 முதம் 7.11.2013 வரையிலான குருவின் 2-மிட சஞ்சாரம். சனி மற்றும் ராகுவின் சஞ்சாரங்களும் யோகமானவையே.
அனுகூலமற்ற காலம்:–31.1.2013. முதல் 26.5.2013 வரையிலான குருவின் ஜென்ம சஞ்சாரம். மற்றும் 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரையிலான குரு வக்கிர நிலை. கேதுவின் 12-மிட சஞ்சாரமும் சாதகமற்றது.
ஆண்டின் தொடக்கத்தில் 30.1.2013 வரை குரு வக்கிர சஞ்சாரத்தில் ருக்கிறார். அதோடு   மற்ற மாதக் கிரக சஞ்சாரங்களும்   துணையாக இருப்பதால் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும். வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம்  நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த மனக் கசப்புகள் மாறும். குடும்பச் சடங்குகள் ,தெய்வ ஆராதனைகள், திருமண வைபவங்கள் நிகழும். பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம்  கையில் சரளமாகப் புரளும். கூட்டுத் தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.
இனி 31.1.2013 முதல் 26.5.2013 வரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்  குரு அவ்வளவு நற்பலன்களைத் தரமாட்டார்.  ஆனல்,  இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும் ஆண்டாக இருக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்,நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்ன?குரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2013- மே மாதம் 27-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால்  வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 26–ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம குருவின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். மே மாதம் 27-ம் தேதியில் குரு சாதகமாவது மட்டுமில்லாமல் , சனி, ராகு ஆகிய கிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
ஆண்டின் முற்பாதியில் குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள்.  பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சிகாண முடியும். மேற்படிப்பு நினைத்தவண்ணம் அமையாது. வேலை கிடைக்காமலும் கஷ்டப்படநேரும். நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் தடைப்படும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.  உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும்.  உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.  யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப்போட்டு அந்தப் பணத்தை நீங்கள் கட்டச் சொல்லி தீர்ப்பு வரும்.  பூர்வீகச் சொத்தில் இழுபறி  தொடரும்.  தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்குட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கள் ஏற்படும். உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவநம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்துகொள்ளும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் ,சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய் கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும். எனவே கடன், கைமாற்று, இவற்றை  சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும். சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்ரும். பிள்ளைகளாலும் கவலை ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும்.
கேதுவின் 12-மிட சஞ்சாரமும் தொல்லை  தருவதாகவே அமையும். பண விரயம், பொருள் நஷடம் இவைகளைத் தவிர்க்க முடியாது. கணவன்-மனைவி உறவு சண்டை சச்சரவாகவே இருக்கும். வீண் அலைச்சல் மிகும். எந்த லாபமும் தராத பயணங்களை மேற்கொண்டு உடல் தளர்ச்சியடைவதுதான் மிச்சம். சரியான உறக்கமின்றி ரத்த அழுத்தம் அதிகமாகும். நிம்மதியற்ற சூழ்நிலையில் அல்லாட வேண்டியிருக்கும். சாது, சந்நியாசிகளின் சாபத்துக்கு ஆளாக வேண்டிவரும். சிலருக்கு பயணங்களின்போது கைப்பொருள் களவு போகும். தவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சிறை செல்லவும் கூடும்.
ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 26 வரைதான்.
மே 27-2013-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.
இது மட்டுமின்றி , ஆண்டு முழுவதும் சனிபகவானின் 6-மிடத்து சஞ்சாரமும் நல்ல பலன்களைக் கொடுக்கும். துலா ராசியில் உச்ச சனியாக சஞ்சரித்து உங்களுக்கு பலவித யோகங்களுக்கு  சனி பகவான் வழிகாட்டுவார். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் ஒரு சேர நிகழ்ந்து உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். அதுபோலவே ராகுவின் 6-மிடத்து சஞ்சாரமும் ,தான் நிற்கும் இடத்தில் சேர்ந்திருக்கும்  சனிபகவானுடன் சேர்ந்து சனி பகவான் தரும் நற்பலன்களையே வாரிவழங்கும்.
ஆண்டின் இறுதியான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரைலான குருவின் வக்கிர சஞ்சார காலத்தில் உங்களுக்கு நற்பலன் நிகழ வாய்ப்பில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கும். சிலருக்கு உடல் நலத்தில் சின்னச் சின்ன தொந்தரவுகள் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளும், வீண் குழப்பங்களும், வம்புகளும் என்று ஏதாவது தொல்லை  இருந்துகொண்டிருக்கும்.  26.5.2013 முன்பு  4 மாத காலங்களுக்கு   ஜென்ம ராசியில் நடந்த குருவின்  சஞ்சாரத்தின்போது இருந்தது போல் அத்தனை கஷ்டங்களும் இருக்கும். சில விஷயங்கள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். குடும்ப அமைதி காணாமல் போய் சண்டை  சச்சரவுகள் மிகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி தராது. வண்டி வாகனங்களுக்கு ரிப்பேர் செலவு வரும். வேண்டாத வழக்குகளிலும் சிக்கிக்கொள்ள நேரும்.  சனி பகவான் உச்ச நிலையில் 6-மிடத்தில் சஞ்சரிப்பதாலும் அவருக்கு குரு பார்வை கிடைப்பதும்  தொல்லைகளை பெருமளவுக்கு குறைக்கும்.
இப்படியாக ஆண்டின் முற்பகுதியில்  சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத இறுதியில்  வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு  இனிய குரு பெயர்ச்சியினாலும், -ராகு  இவர்களின் சாதகமான சஞ்சாரத்தாலும் இனிமை தரும் நல்லாண்டாகும்.
பரிகாரம்:
உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு முறை  மிருத்யஞ்ச்சய  ஹோமமோ அல்லது ஆயுஷ் ஹோமமோ செய்யுங்கள். ஆதித்ய ஹிருத்யம்  தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகரை வழிபாடு செய்வதுடன் வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்யவும். ஆண்டின் முற்பாதிவரை குருவின் சஞ்சாரம் சரியில்லாததால வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்திக்கு மஞ்சள் மலர் மாலையும் கொண்டக்கடலை மாலையும் அணிவித்து வழிபடவும்.  உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.
வாழ்க பல்லாண்டு!சிறக்கட்டும் புத்தாண்டு!

No comments:

Post a Comment