Friday, 30 November 2012

புத்தாண்டு பலன் மேஷம் ராசி 2013


மேஷம்:
அஸ்வினி; பரணி மற்றும் கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
[ சாதகமான காலம்- குருவின் 2-மிட சஞ்சாரமான  31.1.2013  முடஹ்ல் 26. 5.134 வரை  மற்றும் குரு வக்கிர  காலமான   8.11.2013 முதல் ஆண்டின் இறுதி வரை.
சாதகமற்ற காலமான  குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1.2013 வரை மற்றும் குருவின் 3-மிட சஞ்சாரமான 27.5.2013 முதல் 7.11.2013 வ்ரை ]
இந்த 2013ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 7-ம் இடத்திலும் கேது  உங்கள் ஜென்ம ராசியிலும்  சனி உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும், குரு மே மாதம் 26-ம் தேதிவரை 2-ம் இடத்திலும்  மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ஆண்டுத் துவக்கம் முதல் 30.1.2013 வ்ரை  ஒரு ,மாத காலத்துக்கு குரு வக்கிர கதியில் இருப்பதால், உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள், அனாவசியத் தொந்தரவுகள் வீண் சிக்கல்கள் இப்படி ஏதாவதொரு பிரச்சினை தேடி வந்து உங்களை வாட்டும். மனக் கஷ்டமும் டென்ஷனும் உங்களை ஆட்டிப் படைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் , தாமதங்களும் வந்து எந்தக் காரியமும் உருப்படியா நடக்காது. எல்லா வேலைகளும் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். வியாபாரம் மந்த நிலையை அடையும். வருமானமும் குறையும்.இந்த ஒரு மாதத்தை எச்சரிககையாகக் கடக்கவேண்டியது அவசியம்.
குருவின் சஞ்சாரம் மே மாதம் 26-ம் தேதிவரையிலும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் வர்த்தகம் வாணிபம்  செய்து வருபவர்களுடன் வர்த்தக் உறவு மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் வேற்று இன ,மத மக்கள் அந்நிய மொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவியாக வும் நட்பாகவும் இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம் , நூதனமான பொருள்கள், எலக்ட்ரானிக்பொருள்கள் அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள்  மேன்மையான நிலையினை அடைவார்கள். ஏற்றுமதி –இறக்குமதி தொழில் செய்தவர்களுக்கு தற்போது  அதிர்ஷ்டமான காலமாகும். இந்த காலத்தில் இவர்கள் ஒரு கணிசமான தொகையைசம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். சிலருக்கு கோவில், மடாலயம் இடங்களில் கௌரவப் பட்டங்களும் பதவி, பொறுப்புகளும் கிடைக்கும். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் ஆசியும் கிடைக்கும்.சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்ளுதல் போன்ற வாய்ப்பினைப் பெருவார்கள். பூர்வீகச் சொத்து மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் மேன்மையும் கிடைக்கும். சிலர் இந்த சமயத்தில் தர்ம நியாயங்களுக்கு உட்பட்டு பணம் தேடுவார்கள். எதிர்பாராத வருமானம் ஈட்டுவார்கள். அதன் காரணமாக தன்னுடைய பரம்பறை குலதர்மம் ஆகியவற்றை விட்டுவிட்டு கேவலமான நிலையில் பணமே பிரதானமாக அமையும் வாய்ப்புண்டு. அரசாங்கம் ,அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருருத்தாக உங்கள் செயல்திறனைக்கண்டு பயனைடைவார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த சமயம் ஊதிய உயர்வு, பணிஉயர்வு கிடைக்கும். சொந்த ஊரை விட்டு வேற்றூரில் வேலைபார்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பிர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றி உத்தரவு வரும். மேலதிகாரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக  லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். எடுத்த காரியங்களை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி திறமையாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இடருக்கும். மனைவி வழி உறவினரால் நன்மை கிடைக்கும். இதுவரை குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கூட்டுத்தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலர் ரிப்பேர் செலவு கொடுத்துவந்த வன்டியை விற்றுவிட்டு புதிய வண்டி வாங்குவார்கள்.  சிலர் புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவார்கள். மாணவர்கள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மாமன் வழி உறவினர்களால் தற்போது உதவிகள் கிடைக்கும். தொழிலாளிகள் , வேலைக்காரர்களால் நன்மை கிடைக்கும்.மாற்றுமத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில்  மேன்மை ஏற்படும். புத்திர- புத்திரிகள் மேன்மை அடையவார்கள். புத்திர- புத்திரிகள்மேன்மை அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பெரியோர்கள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது திருமணம் ஆகும். மாணவராக இருந்தால் தற்போது உன்னதமான நிலையை அடைவீர்கள். மனதில் தைரியமும் செயலில் சுறுசுறுப்பும் ஏற்படும். கல்வி, வங்கி,பத்திரிக்கை, எழுத்துத்துறை,ஆசிரியர் பணியில் உள்ளோர் மேன்மை அடைவார்கள். உங்களுடன் பழகும் நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவிகள் பல செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். நல்ல வருமானம் கிடைப்பதுடன், பல பொறுப்பான பதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும்.  வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வந்து சேரும். உங்களுக்கு அதிகாரமான  பதவி அந்தஸ்து முதலியவை உண்டாகும். சிலருக்கு விதவைப் பெண்களுடன் பழக்கவழக்கங்கள் ஏற்படவாய்ப்புண்டு. ஆனால் அந்தப் பெண்ணின் மூலமாக துன்பம் உண்டாகும். . உங்களுடைய பராக்கிரமும் வீரதீரச் செயல்களும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். ஆகவே இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். சிலர் மத விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி அதன்மூலம் நல்ல புகழை அடைவார்கள். சிலர் அதைப் பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். அதனால், எதிர்காலத்தில் இவர்களுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று சாதனை வீரராக வலம் வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிவாய்ப்பீர்கள். வேண்டியதையெல்லாம் வாங்கித் தருவீர்கள். அதனால் குடும்பத்தினர் உங்கள்மீது அன்பைப் பொழிவார்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை உடல்நலம் பெறுவார். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன் மற்றும் மாமன் வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். அரசு வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். இதுவரை அனுபவித்து வந்த துன்பம் ,தொல்லை ,வறுமை அனைத்தும் நீங்கி வளம் பெறுவீர்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக  உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த நிலை மாறி இனிமேல்  குன்றின் மேலிட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும். சொன்னது சொன்னவாறு நடந்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் நாணயம் மிக்கவர் என்று பெயரெடுப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த கடன்கள் இப்போது வசூலாகும். தற்போது உங்களுக்கு எதிராக உங்கள் எதிரிகளால் செய்யப்படும் காரியங்கள் கூட சாதகமாக உங்களுக்கு  மாறி உங்களை மேம்படுத்தும்.
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் சாதகமற்ற சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் துலா ராசியில் உச்சத்தில்  சஞ்சரிப்பதால் கெடு பலன்கள் அவ்வளவாக நிகழாது. ஆனால் சில சாதமற்ற பலன்களை இங்கே குறிப்பிடவேண்டியதாகிறது. அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி  நிம்மதியற்ற சூழ்நிலை நிலையை சனி உருவாக்குவார். வியாபாரத்தில் மந்த நிலை நிலவுவதால் வருமானமும் முறைய வாய்ப்புண்டு. வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்ககியால் அவதியுற நேரும். இளைஞர்கலுக்கு புத்தி நல் வழியில் செல்லது. உறவினர்களும் நண்பர்கலும் உங்களை வெறுத்து ஒதுக்குவர்.  கூட்டுத் தொசிலில் பல பிரச்சினைகள் உருவாகும். அரசாங்கத்தின் மூலம் தணடணை பெறும் சூழலும் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு புகழ் மங்கும். ஆனால் இந்த சமயத்தில் குருவின் சாதகமான சஞ்சாரம் இருக்கும்போது  பயப்படத் தேவையில்லை.
ராகுவின் 7-ம் இடத்து சஞ்சாரம் சில நன்மைகளைக் கொடுப்பதுபோல் கொடுத்து திடீரென கவிழ்த்து விடுவார். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் சில உதவிகளும் கிடைக்கும். சிலர் தங்கள் தொழிலில் மாற்றம் ஏற்ப்டுத்திக்கொள்வார்கள். சிலர் இடம் விட்டு இடம் மாறும் சூழ்நிலை உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் கெடும். கணவன்-மனைவியரிடையே கருத்து வேற்றுமை உண்டாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கொரவக் குறைவு ஏற்படும்.
கேதுபகவானின் 2-மிட சஞ்சாரம்  பொருளாதாரத்தில் பினன்டைவை ஏற்படுத்தும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் மிகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் குடிகொள்ளும். உடல் நலம்  கெடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படும்.  மாணவர்களுக்கு படிப்பிலிருந்து கவனம் சிதறும். இப்படியான சாதகமற்ற பலன்கள் குருவின் சாதகமான சஞ்சாரம் நடைபெறும் காலங்களில்  எந்த தீய பலன்களையும்  ஏற்படுத்தாது.
இனி மே மாதம் 27-ம் தேதியன்று  குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கு மாறப்போகிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது.
நீங்கள் செய்யும்  செயல்கள், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை செய்வதற்காக வெளியூருக்கு சென்றுவிடுவார்கள். உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சகோதரர்கள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்பட்டு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். கல்வி கேள்விகளில் தடை ஏற்படும். படிப்பில் கவனம் செல்லாமல் போகும். மனதில் தைரியம் இல்லாமல் எந்த வேலைக்கும் தயங்கியபடி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பீர்கள். பேச்சில் வேகம் காணப்படும். யாரிடமும் சட்டென்று கோபித்துக்கொள்வீர்கள். அதனால், பல விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள்  பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள்  வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும்  ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள்  அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.
மூன்றாமிட குருவோடு  கெண்ட சனியும்  ஜென்ம கேதுவும்  சேர்ந்துகொள்வதால், கொஞ்சம் கடுமையான பல்ன்களாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை  பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும்  பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கெண்டச்சனி சிலசமயம் பணவரவைக் கொடுப்பார். ஆனால், நீங்கள் ஏமாந்துவிடவேண்டாம். பின்னாலேயே அதிக செலவைக் கொடுத்து கடனாளியாக்குவார். கஷ்டத்தில் உங்களைச் சிக்க வைப்பதற்காகவெ கெண்டச்சனி இந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவார். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு,  கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க  நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் பாழ்கும்.  இந்த கெண்டச்சனி உச்ச சனியாக இருப்பதால் ஒரேயடியாக  உங்களைக் கவிழ்த்துவிட மாட்டார்.  நிதிநிலைமை ரொம்ப மோசமாகி விடாமல் காப்பாற்றுவார்.
ஆண்டின் இறுதிப் பகுதியான 2 மாதங்களில் அதாவது 8.11.2013 முதல், ஆண்டின் இறுதி வரை குரு வக்கிர சஞ்சாரத்தில் இருப்பதால், உங்களுக்கு மீண்டும் நற்பலன்களாக நிகழும். ஆண்டின் முற்பாதியான 26.5.13க்கு முந்தைய காலங்களில் குருவின் சாதகமான சஞ்சாரத்தில் நிகழ்ந்த நற்பலன்களே மீண்டும் நிகழும். சூப்பரான யோக பலன்கள் நிகழும்.  இதுவரை தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் உடனுக்குடன் நடக்கும். தடைப்பட்ட  முயற்சிகள் உடனுக்குடன் நல்ல முடிவை எட்டும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிர்பார்பப்து கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை தேடிகொண்டிருந்தால் வேலை  கிடைக்கும். வேலையிலிருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். சிலர்  வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு அதன்மூலம் பயனடைவர். சிலருக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும். கோர்ட் கேஸ்களில் வெற்றி நிச்சயம். அரசியலில் உள்ளவர்களுக்கு இந்தச் சமயத்தில் ஆதாயம் உண்டு. கலைஞர்களுக்கு சூப்பரான காலம் இது.
இப்படியாக கிரகங்களின் பலவித சஞ்சாரங்களால், ஏற்படும் பலன்களைப் பார்த்தோம். மொத்தத்தில் ஆண்டின் பிற்பகுதி மட்டுமே கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.
பரிகாரம்:
மே மாதம் 27-ம் தேதி முதல் குரு 3-ம் இடத்துக்கு செல்வது நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி  கோவிலுக்குச்  சென்று கொண்டக்கடலை மாலையும் ,மஞ்சள் நிற மாலை யும் சாத்தி வழிபடவும். சனீஸ்வரனின் 7-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்தீபம் ஏற்றவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும்.  கறுப்புப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’ படிக்கவும். ராகுவின் சஞ்சாரத்தை சாதகமாக எடுத்துக்கோள்ள முடியாது. எனவே வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை எலுமிச்சம்பழமாலை கொண்டு வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும்.  கேது சஞ்சாரமும் சரியில்லாததால்,  வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து ,வினாயகரை வழிபடவும். கொள்ளுதானம் செய்யவும்.
பல் வளமும் சிறப்பும் பெற்று புத்தாண்டில் புது மகிழ்ச்சி காண வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறோம்.

1 comment:

  1. ஐயா வணக்கம். தங்களது இந்த பதிவுகள் அனைத்தும் மிக எளிமையாகவும் புரிந்து கொள்ளும்படியும் உள்ளது. தங்களது ஈமெயில் எனக்கு அனுப்பவும், தங்களிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டி உள்ளது. தங்களுக்கு நேரம் இருந்தால் கொடுத்து உதவவும். எனது ஈமெயில் micronagu@yahoo.com

    ReplyDelete