Monday 12 November 2012

படிக்கும் அறை


காலத்தால் அழக்க முடியாதது கல்வி செல்வம். கல்விக்கு ஞாபக சக்தி என்பது மிகவும் முக்கியமாகும். கல்வி பயிலுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேறுபாடு இருக்கும். சிலர் புத்தகத்தை திறந்து வைத்திருப்பது போல தான் இருக்கும். ஆனால் மனதிற்குள்ளேயே மனப்பாடம் செய்வார்கள். சிலருக்கோ பள்ளியில் சொல்லி தரும் பாடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் தொண்டை வலிக்க கத்தி கத்தி படித்தால் தான் மண்டையில் ஏறும். இப்படி பல விதங்களில் கல்வி பயிலுபவர்களுக்கு சரஸ்வதி தேவியின் துணையிருக்க, வாஸ்துபடி வீட்டின் எந்த திசையில் படிக்கும் அறையினை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது, படிக்கும் மாணவ மாணவிகள் வடக்கு அல்லது கிழக்கு பார்த்து அமர்ந்து படிப்பது சிறப்பு. பொதுவாக படிக்கும் அறையானது, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் அமைவது நல்லது.
 
 தென்மேற்கு அறைக்கும், வடமேற்கு அறைக்கும் நடுவில் உள்ள பகுதியில் படிக்கும் அறை அமைப்பதும் வடமேற்கு மேற்கு பகுதிக்கு வடகிழக்கு பகுதிக்கும் மத்தியில் உள்ள வடக்கு பகுதியில் படிக்கும் அறையை அமைப்பது நல்லது. அதுபோல புத்தகங்களை வைத்து படிப்பதற்கு உபயோகிக்க கூடிய மேஜை நாற்காலிகளை அறைக்கு தென்மேற்கு, மேற்கு வடமேற்கு பகுதியில் அமைத்து வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து படிப்பது போல அமைப்பது சிறப்பு.

புத்தகங்களை அடுக்கி வைக்கும் செல்ப்புகளை படிக்கும் அறைக்கு தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் அமைத்துக் கொள்வது சிறப்பு. படிக்கும் அறையில் வடகிழக்கு பகுதியில் அதிக எடையுள்ள பொருட்களை (புத்தக செல்ப்) வைக்காமலிருப்பது நல்லது. ஆக படிக்கும் அறையானது தென்மேற்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் அமைத்தால் கல்வியில் நல்ல முன்னேற்றம், ஞாபகசக்தி, யாவும் உண்டாகும்.

No comments:

Post a Comment