Monday, 12 November 2012

பஞ்சம ஸ்தானம்

ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5 ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும்.

ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாக தோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அதுபோல ஒருவரது தந்தை பாட்டான் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத்தடை, திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்விலும் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

இதுபோன்ற கெடுதிகள் எல்லாம் விளக்கும் பாவமாக விளங்குவது 5 ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5 ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5 ஆம் அதிபதி சனி, ராகு, போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது.
  
குறிப்பாக 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் 5 ஆம் வீட்டில் குரு சுக்கிரன் சந்திரன், போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5 ஆம் வீட்øட் சுபர் பார்வை செய்து 5ல் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலைமுறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும் அதுமட்டுமின்றி 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

No comments:

Post a Comment