கார் இன்ஷ்யூரன்ஸ் போடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பலர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. கார் இன்ஷ்யூரன்ஸ் போடும்போது சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமின்றி, அவசர காலங்களில் அதன் முழுப் பயனையும் பெற முடியும். இதோ அதற்கான சில டிப்ஸ்...
1.இன்ஷ்யூரன்ஸ் முகவர் உதவியுடன் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளில், எவை எவைக்கு காப்பீடு அளிக்கப்படுகின்றன என்ற விவரத்துடன், அத்திட்டத்திற்கான கட்டணங்களை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
2.பாலிசியின் தொகை அதிகமாக இருந்தாலும், மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள நிறுவனத்தில் இன்ஷ்யூரன்ஸ் செய்வது பாதுகாப்பானது.
3.காருக்கு அனைத்து வகையிலும் காப்பீடு தரக்கூடிய பாலிசியாக இருந்தால், அதிக கட்டணமாக இருந்தாலும் பரவாயில்லை. அது அவசர காலங்களில் உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
4.பழைய காராக இருந்தால், இன்ஷ்யூரன்ஸ் கவரேஜில் திருட்டு போன்றவற்றிற்கு இன்ஷ்யூரன்ஸ் செய்வதை தவிர்க்கலாம். சில சமயங்களில் காரின் மதிப்புக்கு கூடுதலாக நாம் இன்ஷ்யூரன்ஸ் தொகை செலுத்த நேரிடும் என்பதால், பழைய கார்களுக்கு பொது இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளை தேர்வு செய்வது நல்லது.
5.இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களின் தள்ளுபடி அறிவிப்புகளை கண்டு ஏமாற வேண்டாம். அப்படியே அந்த பாலிசியை எடுக்க நினைத்தால், பழைய பாலிசியுடன் ஒப்பிட்டு பார்த்து போடுவது நலம்.
6.வீடு மற்றும் கார் வாங்கும்போது, இரண்டிற்கும் சேர்த்து இன்ஷ்யூரன்ஸ் போடுவது அதிக பலன்களை தரும்.
7.காரில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை பாலிசியில் குறிப்பிட மறக்க வேண்டாம். இதனால்,பாலிசிக்கு செலுத்த வேண்டிய தொகை குறைய வாய்ப்பு உண்டு.
மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டால், நிச்சயம் சிறந்த கார் இன்ஷ்யூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
No comments:
Post a Comment